
ஆஸ்திரேலியாவில்
புகலிடம் தேடி வந்தவர்களின் படகு கடலில் கவிழ்ந்த விபத்தில் இருவர் இறந்தனர்.
மேலும் இருவர் காயமடைந்தனர். பல்வேறு நாடுகளில் இருந்து ஆஸ்திரேலியாவில் தஞ்சம்
அடைய வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அதுபோல 95 பேருடன்
புகலிடம் நாடி வந்தவர்களின் படகு கிறிஸ்துமஸ் தீவு அருகே கடலில் கவிழ்ந்தது. தகவல்
அறிந்ததும் ஆஸ்திரேலிய கடல் பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து
தண்ணீரில் தத்தளித்த 93 பேரை மீட்டனர்.
இருவர் நீரில்
மூழ்கி இறந்தனர். காப்பாற்றப்பட்டவர்களில் 2 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என
அதிகாரிகள் தெரிவித்தனர். புகலிடம் நாடி வந்தவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்
என்பது உடனடியாக தெரியவில்லை.
nk
thedipaar thanks
No comments:
Post a Comment