அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Tuesday, 26 March 2013

தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் 6 பேரின் தண்டனை குறைப்பு


சென்னை: தே.மு.தி.க. சட்டமன்ற உறுப்பினர்கள் 6 பேரின் தண்டனையை ஓராண்டில் இருந்து 6 மாதமாக குறைத்து சபாநாயகர் நடவடிக்கை எடுத்துள்ளார்.


ராதாபுரம் தொகுதி தே.மு.தி.க. அதிருப்தி எம்.எல்.ஏ மைக்கோல் ராயப்பனை சட்டப்பேரவையில் தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள்  தாக்கினர்.

இந்த மோதல் குறித்து உரிமைக்குழு விசாரி்த்து வந்தது. இந்த நிலையில் உரிமைக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவை சபாநாயகர் தனபால் நேற்று சட்டப்பேரவையில் அறிவித்தார்.

இதையடுத்து தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் பார்த்தசாரதி, நல்லதம்பி, சந்திரகுமார் அருட்செல்வன், செந்தில்குமார் முருகேசன் உள்ளிட்ட 6 பேரை ஓராண்டு இடைநீக்கம் செய்து சபாநாயகர் தனபால் அறிவித்தார். இதனை கண்டித்து தே.மு.தி.க உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.

இந்த நிலையில் சட்டபேரவை இன்று காலை கூடியதும், தி.மு.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் தே.மு.தி.க. உறுப்பினர்களின் தண்டனையை குறைக்க வேண்டும் என்று கோரி்க்கை வைத்தனர்.


இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட முதல்வர் ஜெயலலிதா, தண்டனையை 6 மாதமாக குறைக்க சபாநாயகருக்கு பரிந்துரை செய்தார்.

இதையடுத்து, தண்டனையை 6 மாதங்களாக குறைத்து அவை முன்னவர் ஓ.பன்னீர்செல்வம் தீர்மானம் கொண்டு வந்தார். இதைத் தொடர்ந்து தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

ஆனாலும், தே.மு.தி.க எம்.எல்.ஏ.க்களின் தண்டனையை 6 மாதம் என்பது அதிகம் என்றும் மேலும் குறைக்க வேண்டும் என்றும் தி.மு.க உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் இந்த கோரிக்கையை ஏற்க சபாநாயகர் மறுத்துவிட்டதால் தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்

.news.vikatan thanks

No comments:

Post a Comment