கொழும்பு: வடக்கு கிழக்கு மக்களுக்கு இழந்த உயிர்களைத் தவிர
ஏனைய அனைத்தையும் வழங்க தமது அரசு தயாராக இருப்பதாக இலங்கை அதிபர் ராஜபக்சே
தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அம்பாறையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில்
கலந்துகொண்டு பேசுகையில் இதனை தெரிவித்த அவர்," இந்த நாட்டில் சிங்கள, தமிழ்
முஸ்லிம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு இந்த பிறந்த மண்ணின் உரிமை
இருக்கின்றது.
உங்களுக் வேறு நாடு இல்லை, உங்களது தாய்
நாடு இதுவாகும். இந்த நாட்டை எழுப்பி உங்களது உரிமைகளை வழங்குவதே எமது நோக்கம்.
உங்களில் எவரையும் இந்த தாய் நாட்டின் தங்கியிருப்பவர்களாக்க திட்டமிடவில்லை.
நீங்கள் இந்த நாட்டின் உரிமையாளர்கள்.
இந்த காணிகளை மீண்டும் வழங்க
நடவடிக்கை எடுக்கப்படும். போரின் போது இழக்கப்பட்ட உயிர்களைத் தவிர்ந்த ஏனையவற்றை
உங்களுக்கு மீள வழங்க நாம் கடமைப்பட்டுள்ளோம்" என்றார்.
No comments:
Post a Comment