அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Sunday, 24 March 2013

ராமேசுவரத்தில் தொடர்ந்து பதற்றம் : 8 மீன் கம்பெனி குடிசைகளுக்கு நள்ளிரவில் தீ வைப்பு


ராமேசுவரம், மார்ச்

ராமேசுவரத்தில் ஆட்டோ டிரைவரை தாக்கிய விவகாரம் இருதரப்பினர் மோதலாக மாறியது. இந்த மோதலுடன் வேறு சில பிரச்சினைகளும் சேர்ந்துகொள்ள கலவரம் உருவானது.

இதில் குடிசைகளுக்கு தீ வைப்பு, திருமணம் மண்டப பொருட்கள் சூறை என வன்முறை சம்பவங்களில் கலவரக்காரர்கள் ஈடுபட்டனர். சோடாபாட்டில், கற்கள் வீச்சு போன்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசினர். இதனால் கலவரம் கட்டுக்குள் வந்தது.

தென் மண்டல போலீஸ் ஐ.ஜி. அபய்குமார்சிங், ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் டி.ஐ.ஜி. ராம சுப்பிரமணியன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகணன், துணை சூப்பிரண்டு மணிவண்ணன் ஆகியோர் தலைமையில் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் கலவரம் தொடர்பாக 62 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களை போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஏராளமான பெண்கள் ராமநாதபுரம் நகர் போலீஸ் நிலையம் திரண்டு வந்து முற்றுகையிட்டனர். கைதானவர்களில் பலருக்கு கலவரத்தில் தொடர்பில்லை என்றும், ஒரு தரப்பினர் அதிக அளவில் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் பெண்கள் கூறினர். இதில் தவறு செய்தவர்கள் மீது மட்டுமே உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் டி.ஐ.ஜி. ராமசுப்பிரமணியன் உறுதி அளித்ததையடுத்து பெண்கள் கலைந்து சென்றனர்.

இந்த நிலையில் துறைமுகம் பகுதியில் உள்ள 8 மீன்கம்பெனி குடிசைகளுக்கு நேற்று நள்ளிரவு யாரோ தீ வைத்து விட்டனர். இதில் குமரேசன், ராமர், புல்லட் அருன், குட்வின், ரோமேகா, கமலர் ஆகியோரது மீன் கம்பெனி குடிசைகள் எரிந்து நாசமாயின.

தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் தடுத்தனர். இந்த குடிசைகளில் தான் மீனவர்களின் மீன்பிடி சாதனங்கள் வைக்கப்பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. கமலர் என்பவரது 3 கம்பெனி குடிசைகளும் தீயில் எரிந்து நாசமானது.

இந்த சம்பவம் காரணமாக ராமேசுவரத்தில் 2-வது நாளாக பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் போலீசார் ரோந்து சுற்றி வருகின்றனர். மீன் கம்பெனி குடிசைகளுக்கு தீ வைத்த மர்ம மனிதர்கள் கோவில் காவல் நிலையத்தினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

தீ விபத்தில் சேதமடைந்த குடிசைகளை தாசில்தார்கள் கதிரேசன், சந்திரவதனி ஆகியோர் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். 

maalaimalar thanks

No comments:

Post a Comment