
இந்த சில நாட்களாக மீண்டும் பதினைந்து முதல் பதினெட்டு மணி நேர மின்வெட்டு அமலில் உள்ளது. மேலும் அரசு தேர்வு எழுதும் மாணவர்கள் - மின்வெட்டால் பாதிக்கப்படக்கூடாது என்பதால் அரசு பள்ளிகள் இருக்கும் பகுதிகளில், தேர்வு நேரத்தில் தடை இல்லா மின்சாரம் வழங்கப்படுகிறது. அதே நேரம் பிற பகுதி மக்கள் கூடுதல் மின் தட்டுப்பாட்டை எதிர்நோக்குகின்றனர்.
அரசு விலை இல்லா பொருட்களை தர காட்டும் ஆர்வத்தை புதிய மின் உற்பத்தி நிலையங்களை துவக்க காட்டவில்லையோ என்று தோன்றுகிறது. விலை இல்லா பொருட்கள் வாக்குகளை குவித்துவிடும் என்று நினைக்கிறார்களா? சென்ற ஆட்சியாளர்களுக்கு நேர்ந்த முடிவை நினைத்து பார்ப்பது நல்லது.
தமிழகத்தின் 2013 - 14ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், அரசு வழங்கும் அரிசி, மிக்சி, கிரைண்டர், மின் விசிறி உள்ளிட்ட விலையில்லா திட்டங்களுக்கு, பட்ஜெட் மதிப்பில், 31 சதவீதத் தொகை ஒதுக்கப்பட்டு உள்ளது. இதனால், நிதிப் பற்றாக்குறை, 23 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. விலையில்லா அரிசி, மிக்சி, கிரைண்டர், மின் விசிறி, பசுமை வீடுகள், முதல்வரின் காப்பீட்டுத் திட்டம், மாணவர்களுக்கு மடி கணினி உள்ளிட்ட சமூக பாதுகாப்புத் திட்டங்கள், வரும் நிதியாண்டிலும் தொடர்கின்றன.

இந்தாண்டு ஜூன் மாதத்திற்குள், மின் வெட்டு பிரச்சனை தீர்க்கப்படும் என, சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா ஏற்கனவே அறிவித்து இருந்தார். ஜூன் மாதம் வரை பொறுந்திருந்து தான் பார்க்க வேண்டும். "அது சாத்தியம் தானா" என்பதை. மேலும், செயல்பாட்டில் உள்ள புதிய மின் திட்டங்களிலிருந்து, 3,230 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் எனவும் கூறியிருந்தார். இதில், வல்லூர் மின் உற்பத்தி திட்டத்தில், 500 மெகாவாட் திறன் கொண்ட முதல் அலகு மட்டுமே மின் உற்பத்தியை துவங்கி உள்ளது.
அரசின் புதிய கணக்குப்படி, தற்போது நிறுவப்பட்டு வரும் வல்லூர், மேட்டூர், வட சென்னை மற்றும் தூத்துக்குடி திட்டங்களில் இருந்து படிப்படியாக 3,230 மெகாவாட் மின்சாரம் 2014 மார்ச் மாதத்திற்குள் பெறப்படும். இதில், கூடங்குளம் மின்சாரத்தை அரசு கணக்கில் எடுத்து கொள்ளவில்லை என்பது, குறிப்பிடத்தக்கது. ஆனால், ஏற்கனவே தாமதமாகி வரும் இந்த திட்டங்கள் அனைத்தும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முழு செயல்பாட்டிற்கு வருமா என்பது சந்தேகத்திற்குறிய ஒன்று தான்.
அதுவரை பற்றாகுறை நிலை நீடிக்கும் என்பதே நிதர்சன உண்மை. இந்த திட்டங்கள் அரசு அட்டவணைப்படி செயல்பாட்டிற்கு வந்தாலும், தற்போதைய நிலவரப்படி உள்ள பற்றாகுறை நிலை மட்டுமே தீர வாய்ப்பு உள்ளது. அப்போது மேலும் உயரும் புதிய மின் நுகர்வை சமாளிக்க புதிய குறுகிய கால திட்டங்கள் ஏதும் இல்லை. ஆக மின் தட்டுப்பாடில்லாத தமிழகத்தை காண்பது சாத்தியமே இல்லை போலும்.

மக்கள் - மின்தட்டுப்பாட்டுக்கு அரசு சொல்லும் சமாதானத்தை ஏற்க தயாராக இல்லை. 2014 தேர்தலுக்குள் ஓரளவேணும் மின்வெட்டு போக்கப்படவில்லை எனில் தேர்தல் - அ.தி.மு.க.,வுக்கு சுகமாய் இராது. மக்கள் - கிடைத்ததை விட (விலை இல்லா பொருட்களை) கிடைக்காததை தான் (மின்சாரம்) மையப்படுத்தி வாக்களிப்பார்கள்.
பதிவுக்கு உதவி : தினமலர் செய்தி.
/oosssai thanks
No comments:
Post a Comment