அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Wednesday 27 March 2013

பத்திரிகையாளர் பேச்சு, தலையங்கத்தோடு போச்சு...



பத்திரிகை ஊடகம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், பத்திரிகையாளர்களை எப்படியெல்லாம் தேர்வு செய்யவேண்டும் என்று முன்னாள் உச்சநீதி மன்ற நீதிபதியும், பிரஸ் கவுன்சில் சேர்மன் மார்கண்டேய கட்ஜு கூறி இருக்கிறார். மார்கண்டேய கட்ஜு அவர்களின் கருத்தை சற்றே ஆமோதித்து சன் குழும தினகரன் நாளேடும் தலையங்கம் எழுதி இருந்தது.
 "நடந்து விடுமா, என்ன?" என்கிற தலைப்பில். தலையங்கம் வெளியான சில நாளில் தான், சன் குழுமத்தின் சன் செய்தி ஆசிரியர் ராஜா பாலியல் வன்கொடுமை காரணமாக கைதான செய்தியை வாசித்த போது - இந்த தலையங்கத்தின் ஞாபகம் வந்தது. கட்ஜு அவர்கள் பத்திரிகையாளர்கள் குறித்து சொன்ன கருத்து நூறு சதவிதம் உண்மையாகிவிட்டது. தினகரனின் தலையங்கத்தை வாசியுங்கள்.



"பாட்டு கேட்டால்தான் தூக்கம் வரும் சிலருக்கு. மார்கண்டேய கட்ஜு அந்த சிலரில் ஒருவர். இந்த முன்னாள் நீதிபதிக்கு, ஊடகர்கள் வாயிலிருந்து வரும் நறநற ஓசையே தாலாட்டு. பத்திரிகைகளும் செய்தி சேனல்களும் பொறுப்பில்லாமல் செயல்படுவதாக விமர்சித்து அர்ச்சனைக்கு ஆளானார். செய்தியாளர்களை பற்றி அவருக்கு உயர் எண்ணம் கிடையாது. அதற்காக ஒதுக்க முடியுமா, ஒதுங்க இயலுமா. பிரஸ் கவுன்சில் சேர்மன் ஆயிற்றே.

கல்வித் தகுதி நிர்ணயித்து செய்தியாளர்களின் தரத்தை உயர்த்த விரும்பினார். அதற்காக ஒரு கமிட்டி நியமித்தார். விடுவார்களா, நம்மவர்கள். படிப்புக்கும் பத்திரிகையாளன் ஆவதற்கும் சம்பந்தமே கிடையாது என்கின்றனர். ஒரு பிரபலமான எடிட்டர், ‘பி.ஏ ஃபெயிலான நான் இன்று நன்றாகத்தானே இருக்கிறேன்’ என்கிறார். இன்னொருவர், ‘நான் படித்திருந்தால் இந்த தொழிலுக்கு வந்திருப்பேனா’ என்று கேட்கிறார்.

நாலைந்து முதுகலை பட்டங்கள் பெற்ற ஒரு பிரபல சேனல் பெண்மணி, ‘செய்தியாளராக விரும்புவோரின் ஆர்வத்துக்கு தடை போடுவதா’ என அங்கலாய்க்கிறார். இன அழிப்பு சதி என்றுதான் இன்னும் எவரும் குமுறவில்லை. கட்ஜு லேசாக மிரண்ட மாதிரி தெரிகிறது. கமிட்டியை விரிவு செய்திருக்கிறார். இதழியல் பாடங்கள், அதை கற்பிக்கும் கல்லூரிகளை ஆய்வு செய்யவாம்.

‘டாக்டர், வக்கீல் மாதிரி இதற்கும் நுழைவுத் தேர்வு நடத்தி, லைசென்ஸ் கொடுத்து அனுமதி வழங்க வேண்டும். முறைகேடாக நடந்தால் செய்தியாளராக பணியாற்ற முடியாதபடி உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்’ என்கிறார். பெரிய பத்திரிகைகள் நிறைய சம்பளம் கொடுப்பதால் செய்தியாளருக்கு உயர்கல்வியும் ஏதேனும் துறை ஞானமும் மொழித்திறனும் தேவை என நிர்ணயித்துள்ளன. சிறு நிறுவனங்கள் வசதிக்கேற்ப விலக்களிக்கின்றன.

படித்தவனால் தொல்லைதான் என்று நம்பும் முதலாளிகள், மழைக்கு பள்ளிப்பக்கம் ஒதுங்கியவரையும் வரவேற்கிறார்கள். விசாரித்தால் ‘பட்டங்கள் எல்லாம் படிப்பின் மூலம்தான் கிடைக்கிறதா’ என திருப்பி கேட்பார்கள். ஊடக உலகம் விரிந்து விட்டது. ஊடகர்களின் அறிவாற்றல் ஈடுகொடுக்க திணறுகிறது. எனில், கட்ஜு விரும்பும் சட்டம் உருவாக அவர்கள் சம்மதித்தாலும் மக்கள் பிரதிநிதிகள் விடமாட்டார்கள். அரசியல்வாதிகளுக்கும் கல்வித் தகுதி கட்டாயம் தேவை என்று நாளை யாராவது கிளம்பினால் என்னாவது." என்று முடித்துள்ளது.

பாம்பின் கால் பாம்பறியும் என்பது போல பத்திரிகையாளர்கள், பத்திரிகை முதலாளிகள் குறித்து "படித்தவனால் தொல்லைதான் என்று நம்பும் முதலாளிகள், மழைக்கு பள்ளிப்பக்கம் ஒதுங்கியவரையும் வரவேற்கிறார்கள்." என்று சரியாக தினகரன் தன் கருத்தை வைத்துள்ளது தலையங்கத்தில். "செய்தியாளர்களை பற்றி மார்கண்டேய  கட்ஜுக்கு உயர் எண்ணம் கிடையாது. மேலும், முறைகேடாக நடந்தால் செய்தியாளராக பணியாற்ற முடியாதபடி உரிமத்தை ரத்து செய்ய வேண்டும" என்று சொன்ன மார்கண்டேய  கட்ஜு கருத்துக்கு தலையங்கம் தீட்டிய சன் குழும தினகரன் ஏடு,

தம் கருத்தை பொய்யாக்க விரும்பாமல் தன் சன் குழுமத்தில் இருந்தே - மார்கண்டேய  கட்ஜு கூற்றுக்கு வலு சேர்க்கும் விதமான ஆதாரமாக சன் செய்தி ஆசிரியர் ராஜாவை தந்தது தான் துயரம். சன் செய்தி ஆசிரியர் ராஜா குறித்த தகவல்களை வாசிக்கும் போது பிரஸ் கவுன்சில் சேர்மன் மார்கண்டேய  கட்ஜு வழி வகுக்கும் ஊடகங்களுக்கான விதிமுறையை ஆட்சோபிப்பதில் நியாயமே இல்லை என்று தான் தோன்றுகிறது.

மார்கண்டேய  கட்ஜு போன்றவர்களின சேவை, அவர்கள் உருவாக்கும் விதிமுறைகள் ஊடகங்களுக்கு அவசியம் தேவை. சன் செய்தியாசிரியர் ராஜாவின் பாலியல் குற்றச்சாட்டை இரட்டிப்பு செய்வதில் - ஆரிய திராவிட ஊடகங்கள் காட்டிய ஒற்றுமை வியக்க வைக்கிறது. இனி எவரும் "வர்ணம் பிரித்து யோக்கியன், அயோக்கியன் என்றெல்லாம் சாட தேவையில்லை". பொய் செய்திகளை வெளியிடுவது எவ்வளவு கேவலமோ, அவ்வளவு இழிவானது - உண்மை செய்திகளை மறைப்பதும். 

oosssai. thanks

No comments:

Post a Comment