அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Thursday 28 March 2013

நடிகர் சஞ்சய் தத் கண்ணீர் பேட்டி: குடும்பத்தினருடன் அமைதியாக வாழ விடுமாறு வேண்டுகோள்(வீடியோ இணைப்பு)

[ வியாழக்கிழமை, 28 மார்ச் 2013, 
மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் சிறைக்கு செல்லவிருப்பதால் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சஞ்சய் தத், கண்ணீர் விட்டு அழுதார்.
மும்பை குண்டு வெடிப்பு(1993) வழக்கில் தொடர்புடையவராக நடிகர் சஞ்சய் தத்திற்கு சிறப்பு நீதிமன்றம் மூலம் 6 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இது தொடர்பான அப்பீலை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் சஞ்சய்தத் சிறைத்தண்டனையை உறுதி செய்ததுடன் 6 ஆண்டை 5 ஆண்டாக குறைத்து தீர்ப்பளித்தது. இதன்படி சஞ்சய் தத், சிறைக்கு செல்ல நீதிமன்றம் சில காலம் அவகாசம் வழங்கியுள்ளது.
இந்த தீர்ப்பிற்கு பின்னர் அவர் அமைதியாக இருந்து வந்தார். யாரையும் சந்திக்கவில்லை. அதே சமயம் அவருக்கு மன்னிப்பு வழங்கக் கோரி ரஜினி காந்த் உள்ளிட்ட பிரபலங்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
இந்நிலையில் தீர்ப்புக்கு பின்னர் சஞ்சய்தத் மனநிலை குறித்து அறிய விரும்புவதாக கூறி நிருபர்கள் அவர் வீட்டின் முன் கூடினார்கள்.
அந்நேரத்தில் வெளியே வந்த சஞ்சய்தத் நிருபர்கள் கொஞ்ச நேரம் யோசனைக்குப் பின் முன்பு பேசுகையில், நான் மிக துயரமான கட்டத்தில் இருக்கிறேன். நான் மிகவும் நொறுங்கி போய் இருக்கிறேன்.
நான் எனது மீதான தண்டனையை குறைக்க கோரி வலியுறுத்தப்போவதில்லை. எனது தண்டனை குறித்து யாரும் விவாதிக்க வேண்டாம். நீதிமன்றம் உத்தரவை மதிக்கும் இந்திய குடிமகன்களில் நானும் ஒருவன்.
இப்போது வழங்கியுள்ள நீதிமன்ற உத்தரவுக்கு பணிந்து நான் விரைவில் சரண் அடைவேன். இந்திய நாட்டை மிகவும் நேசிக்கிறேன்.
திரைப்படம் தொடர்பான சில பணிகள் முடித்து விட்டு நீதிமன்றம் அளித்த நேரத்தில் சிறைக்கு போவேன். அது வரை என்னை, எனது குடும்பத்தினருடன் அமைதியாக வாழ விடுங்கள் என்று சொல்லிக்கொண்டிருக்கும் போது கிளம்புகிறேன் என எழுந்தார்.
அப்போது கண்ணீர் விட்டு அழுதார். தொடர்ந்து அருகில் இருந்த தனது சகோதரி தோளில் சாய்ந்து அழுத அவரை அக்கா தழுவி தேற்றினார்.
newindianews. thanks

No comments:

Post a Comment