அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Wednesday 27 March 2013

சென்னை விமான நிலையத்தை தனியாரிடம் ஒப்படைக்க பரிசீலனை : மத்திய அமைச்சர் தகவல்




சென்னை விமான நிலையத்தை தனியார் வசம் ஒப்படைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது என்று, விமான போக்குவரத்து துறை அமைச்சர் அஜீத் சிங் கூறியுள்ளார்.

சென்னை, கொல்கத்தா விமான நிலைய இயக்கம் மற்றும் நிர்வாகத்தை தனியாரிடம் ஒப்டைக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இந்திய தொழில் கூட்டமைப்பின் சார்பில் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் அஜீத்சிங் கலந்து கொண்டார். அப்போது அவர்,

"சென்னை, கொல்கத்தா விமான நிலையங்களின் நிர்வாகத்தை சர்வதேச டெண்டர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க பரிசீலித்து வருகிறோம். நவி மும்பை விமான நிலைய திட்டப்பணிகள் விரைவு படுத்தப்படும்.

விமான எரிபொருள், மீதான வரிவிதிப்பு பிரச்சனை குறித்து, பெட்ரோலிய அமைச்சகம் மற்றும் நிதி அமைச்சகத்திடம் ஆலோசித்துள்ளோம். இந்த எரிபொருளை பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் கொண்டு வந்து விமான போக்குவரத்து நிறுவனங்களின் நலனை பாதுகாக்க முயற்சி எடுக்கப்படும். இந்த எரிபொருளுக்கான விற்பனை வரியை குறைக்க மாநில அரசுகளிடம் விவாதிப்போம்." என்று கூறியுள்ளார்.

விமான நிலையங்களின் ஆணையத் தலைவர் அகர்வால் பேசுகையில், தனியார் ஆயில் கம்பெனி மற்றும் விமான போக்குவரத்து நிறுவனங்களுடன் இணைந்து கூட்டு நிறுவன முயற்சியில் எரி பொருள் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

4tamilmedia. thanks

No comments:

Post a Comment