கிளர்ச்சிப்
படையினருக்கும் இடையே மூண்ட சண்டையில் 13 அதிரடிப் படையினர் கொல்லப் பட்டதாகவும்
ஒருவர் காணாமற் போனதுடன் 27 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தென்னாபிரிக்க அதிபர்
ஜகோப் ஷுமா தெரிவித்துள்ளார். மத்திய ஆப்பிரிக்காவின் தலைநகர் பான்குயி இனை
முற்றுகையிட்ட சுமார் 3000 பேர் வரையிலான கிளர்ச்சிப் படையினரை எதிர்த்து வெறும்
200 துருப்புக்களே சண்டையிட்டதாக தென்னாபிரிக்க பாதுகாப்பு அதிகாரி
தெரிவித்துள்ளார்.
மேலும்
இச் சண்டையில் ரைஃபிள்கள், மோர்ட்டர்ஸ் மற்றும் கடினமான இயந்திரத் துப்பாக்கிகள்
சகிதம் சனிக்கிழமை இரவு வரை 13 மணித்தியாலங்களுக்கு கிளர்ச்சிப் படையினர் தாக்குதல்
நடத்தியதாகவும் அவர் தெரிவித்தார். எனினும் இச்சண்டையைத் தொடர்ந்து
தென்னாபிரிக்காவுக்கு ஏமாற்றம் அளிக்கும் விதத்தில் தற்காலிக யுத்த நிறுத்தத்தை
மேற்கொள்வதாக அறிவித்த கிளர்ச்சிப் படையினர் தமது இலக்கு அதிபர் போசிஸ் என்பதால்
தென்னாபிரிக்க வீரர்களைக் கொல்ல நேர்ந்தமைக்கு வருத்தம் கொள்கிறோம் எனவும்
தெரிவித்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை
தொடங்கி ஞாயிறு வரை நீடித்த சண்டையில் தலைநகர் பான்குயி இன் நகர மத்தியையும் அதிபர்
மாளிகையையும் தமது பூரண கட்டுப்பாட்டுக்குக் கீழ் இவர்கள் கொண்டு வந்துள்ளனர். அதிக
கணிய வளம் மிக்க நாடுகளில் ஒன்றான மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் தமக்கு உரிமைப்
பங்கு வேண்டுமென்ற கோரிக்கையைச் சர்வதேச சிக்கல்களுக்கு மத்தியிலும் இக்கிளர்ச்சிக்
குழுவின் தலைவர்கள் முன் வைத்துள்ளனர்.
தலைநகர்
பான்குயியில் சுமார் 600 000 குடிமக்கள் மின்சார வசதியின்றியும் தண்ணீர்
வசதியின்றியும் உள்ளனர். இதனால் அந்நாட்டு இராணுவத் தலைவர் Djotodia அதிபர்
இல்லத்தில் இருந்து மக்களுக்கு நாட்டு நிலவரம் குறித்துத் தெரிவிக்க முடியாத
இக்கட்டான சூழ்நிலையும் நிலவுகின்றது. செலகா எனப்படும் இக்கிளர்ச்சிக் குழுவின்
அங்கத்துவத்தை ஆப்பிரிக்க யூனியன் ஏற்கனவே தடை செய்துள்ளமை
குறிப்பிடத்தக்கது.
News
: Source
eutamilar. thanks
No comments:
Post a Comment