திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின்
தனது 60 வது பிறந்த நாளை ஒட்டி தொண்டர்களிடம் வாழ்த்து பெற்றார்.
இன்று காலை 9.30 மணிக்கு சென்னை ராயப்பேட்டையிலுள்ள YMCA மைதானத்திற்கு தனது
மனைவி துர்கா ஸ்டாலினுடன் வந்த அவர் கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த
பிறந்தநாள் கேக்கை வெட்டினார்.
அதனைத்தொடர்ந்து கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் வாழ்த்து
பெற்று வருகிறார்.
தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மகளிர் அணி மற்றும் இளைஞர் அணியையை
சார்ந்த தொண்டர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது வாழ்த்துக்களைத் தெரிவிப்பதோடு,
அன்பளிப்புகளையும் அளித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment