டெல்லி மாணவி வழக்கில் மைனர் மீது கொலை வழக்கு பதிவு
டெல்லி மாணவி கொலை செய்யப்பட்ட
சம்பவத்தில், 18 வயதை நிரம்பாத குற்றவாளி மீது பலாத்காரம் மற்றும் கொலை வழக்குப்
பதிவு செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
டிசம்பர் 16 திகதி டெல்லியில் ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் மாணவி
பலாத்காரம் செய்யப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவதில் குற்றவாளிகளில் ஒருவன் 18 வயதை நிரம்பாததால், சிறார்
சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளான்.
அவன் சிறுவன் என்ற ரீதியில் அவனுக்கு அதிகபட்சமாக 3 ஆண்டுகள் மட்டுமே தண்டனை
வழங்க முடியும்.
இந்த நிலையில், சிறுவனாக இருப்பினும் அவன் செய்த குற்றத்தின் அடிப்படையில் அவன்
மீது பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கினை பதிவு செய்ய சிறார் நீதிமன்ற
நீதிபதி அனுமதி வழங்கியுள்ளார்.
இதற்கிடையே பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித்துறை அமைச்சர் கிருஷ்ணா தீரத்,
இளம் குற்றவாளிகளின் வயது வரம்பை 18லிருந்து 16 ஆக குறைக்கும் திட்டம் இல்லை.
அதற்கான சட்ட திருத்தம் கொண்டு வரப்பட மாட்டாது என்று நாடாளுமன்றத்தில்
அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment