இலங்கைத் தீவில் இடம்பெற்ற இன அழிப்பின்
சம்பவத்தை விளக்கமளிக்கும் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட
தமிழர் உரிமை மகாநாடு ஜெனிவா நகரில் ஆரம்பமானது.
இந் நிகழ்வில் இலங்கையிலிருந்து தமிழ் தேசியக்
கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன்,
பா.அரியநேந்திரன், சீ.யோகேஸ்வரன், சி.சிறிதரன், சுரேஸ் பிரேமச்சந்திரன்
மற்றும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில்
கஜேந்திரகுமார் பொன்னமபலம், செல்வராஜா கஜேந்திரன், மணிவண்ணன் உட்பட,
கனடா பா.உ, தென்னாபிரிக்க அமைச்சர், நோர்வே
பா.உ, மொறிசியஸ் பிரதிநிதிகள், இந்திய நாட்டின் சார்பில் டாக்டர் கிருஸ்ணமூர்த்தி
நடராஜன், கம்யூனிஸ்ட் கட்சியின் தா. பாண்டியன், கணேசமூர்த்தி பா.உ, லண்டன் பா.உ,
அயர்லாந்து பிரதிநிதிகள், மலேசியா, இத்தாலி, பிரான்ஸ், குறிப்பாக தமிழர் வாழும்
அனைத்து நாடுகளிலும் இருந்து வெளிநாட்டு பிரதிநிதிகளும் கலந்து
கொண்டுள்ளனர். 2ம் இணைப்பு இலங்கையின் மீது சர்வதேச சுயாதீன
விசாரணையை வலியுறுத்தி பான்கீ மூனிற்கான அறிக்கை அவரின் பிரதிநிதியிடம்
கையளிப்பு நேற்று மாலை 6.00 மணியளவில் ஜெனிவா அனைத்துலக
மகாநாட்டு மண்டபத்தில் மனித உரிமை மீறல்கள் பற்றி ஜக்கிய நாடுகள் சபையின் செயலாளர்
பான் கீ மூன் அவர்கள் பல்லின மக்கள் முன் உரையாற்றினார். அதில் குறிப்பாக தமிழ்
மக்களும் கலந்து கொண்டது சிறப்பம்சமாகும். இக் குழுவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு
தமிழ் தேசிய மக்கள் முன்னனி கனடியப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்துலக
ஈழத்தமிழர் மக்களவை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
இலங்கையில் நடந்த இன அழிப்பிற்கு சர்வதேச
சுயாதீன விசாரணையை ஐநாவும் சர்வதேச சமூகமும் விரைவு படுத்தி பாதிக்கப்பட்ட
இனத்திற்கு தீர்வு வழங்க காலம் தாழ்த்தாது சர்வதேசம் விரைந்து செயற்பட வேண்டும் என
வலியுறுத்தி அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை சார்பாக ஐநா செயலாளர் முன் அவரது
பேச்சாளர் மார்ரின் நெர்ஸ்கியிடம் (MARTIN NESIRKY) மகஜர்
கையளிக்கப்பட்டது. news thedipaar. thanks
No comments:
Post a Comment