வெளிநாடுகளில் இருந்து ஆண்கள் ரூ. 50,000 மதிப்புள்ள தங்கமும், பெண்கள் ரூ. 1 லட்சம் மதிப்புள்ள தங்கமும் கொண்டு வரலாம்
வெளிநாடுகளில் இருந்து
ஆண்கள் ரூ. 50,000 மதிப்புள்ள
தங்கமும், பெண்கள் ரூ. 1
லட்சம் மதிப்புள்ள தங்கமும்
கொண்டு வரலாம் என்று மத்திய
நிதி அமைச்சர் ப. சிதம்பரம்
தெரிவித்துள்ளார். 2013-2014ம் ஆண்டுக்கான
பட்ஜெட்டை மத்திய நிதி
அமைச்சர் ப. சிதம்பரம் இன்று
தாக்கல் செய்தார். இது
ப.சிதம்பரம் தாக்கல் செய்த
8வது பட்ஜெட் ஆகும்.
வருமான வரியில்
மாற்றம் இல்லாதது ஆறுதலாக
உள்ளது. வீட்டு கடன்
பெறுவோருக்கு கூடுதலாக ரூ.1
லட்சம் வரி விலக்கு
அளிக்கப்படும் என்று அவர்
கூறியது பலருக்கு வீடு
வாங்கும் எண்ணத்தை அளித்துள்ளது.
அவரின் குறிப்பிட்ட ஒரு
அறிவிப்பு பெண்களுக்கு மகிழ்ச்சி
அளித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து
ஆண்கள் ரூ. 50,000 மதிப்பு
வரை தங்கம் கொண்டு வரலாம்
என்றும், பெண்கள் ரூ. 1
லட்சம் மதிப்பு வரை தங்கம்
கொண்டு வரலாம் என்றும் அவர்
அறிவித்தது தான் பெண்கள் மனதை
குளிர வைத்துள்ளது.
No comments:
Post a Comment