அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Saturday 30 March 2013

வேகமாகப் பரவும் புதிய ஆட்கொல்லி வைரஸ்


வேகமாகப் பரவும் புதிய ஆட்கொல்லி வைரஸ்

March 

மத்திய கிழக்கு நாடுகளில் ஆறு மாதங்களுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் என்ற கிருமி சார்சைவிட விரைவாகப் பரவக்கூடியது என்று விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளனர்.


சார்ஸ் போல சுவாச உறுப்புகளை மட்டுமில்லாமல், அனைத்து உறுப்புகளையும் செயலிழக்க வைக்கக்கூடிய அபாயம் இதில் உள்ளது. இது திசுக்களின் இடையே நுழைந்து அவற்றை வெகு விரைவில் அழிக்கின்றது.

கடந்த செப்டம்பர் மாதம் உலக சுகாதாரக் கழகம் இந்த கிருமியினைப் பற்றி எச்சரித்த பின்னர்,இந்த வைரஸ் நோய்க்கு 17 பேர் பாதிக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதில் இதுவரை 11பேர் பாலியாகியுள்ளனர். இவர்கள் அனைவருமே மத்தியக் கிழக்கு நாட்டைச் சேர்ந்தவர்கள். அங்கு சென்று வந்த ஒரு இங்கிலாந்து நாட்டுக்காரரும் சென்ற வாரம் இந்நோயினால் உயிரிழந்துள்ளார்.

இந்த வாராம் ஐக்கிய அரபுக் குடியரசைச் சேர்ந்த 73 வயது முதியவர் ஒருவர், சுவிட்சர்லாந்து நாட்டில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்தக் கிருமியின் மூலக் காரணம் என்ன என்பது தெரியவில்லை என்றபோதிலும், வவ்வால்கள் இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். இவைத்தவிர குரங்குகள், பன்றிகள் மற்றும் முயல்கள் கூட இவை பரவ காரணமாக இருக்கலாம் என்கின்றனர்.

சாதாரண சளி போன்ற வகையிலிருந்து தோன்றியதுதான் சார்ஸ் மற்றும் கொரோனா வைரஸ் கிருமிகள் என்று விஞ்ஞானிகள்ள் கூறுகின்றனர். மூச்சு விட சிரமப்படுதல்,இருமல், நிமோனியா மற்றும் ஜுரம் முதலியவை இந்நோயின் அறிகுறிகளாகும். நோய்கண்ட 48 மணி நேரத்திற்குள்ளேயே விரைந்து பரவும் இக்கிருமி, சிறுநீரகங்களையும் பாதிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

செவ்வாயன்று, உலக சுகாதாரக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து நாடுகளையும் சுவாசக் கோளாறுடன் வரும் நோயாளிகளையும், அந்நோயில் ஏதேனும் மாற்றத்துடன் வருபவர்களையும் தொடர்ந்து கவனிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.


/thamilan. thanks

No comments:

Post a Comment