-
ஏப்ரல் 25, 2013 at 3:24:13 PM

தலைநகர் டாக்காவுக்கு அருகே உள்ள சவர் (Savar) என்ற இடத்தில் 8 அடுக்கு மாடி கட்டடம் நேற்று இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கியவர்களில் 175 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 1000-ற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இன்னும் பலர் இடிபாடுகளில் புதைந்துள்ளதால் அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
முறையற்ற கட்டுமானப்பணிகளே விபத்துக்கு காரணம் என்று தெரியவந்துள்ளது. விபத்துக்கு காரணமான ஆயத்த ஆடை தொழிற்சாலை உரிமையாளர் மற்றும் 5 தொழிற்சாலைகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
http://puthiyathalaimurai.tv/video-gallery?video=2721
puthiyathalaimurai.tv thanks
No comments:
Post a Comment