
டெல்லி காந்தி நகரை சேர்ந்த 5 வயது சிறுமி ஏப்ரல் 15 ஆம் தேதி மாயமானாள். குழந்தை காணாமல் போனது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்று அப்பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் காணமல் போன குழந்தை உடல் முழுவதும் காயங்களுடன் மயங்கிய நிலையில் மீட்க்கபட்டாள். இது குறித்த விசாரணையில், 5 வயது சிறுமியை அதே பகுதியில் வசிக்கும் 30 வயது நிரம்பிய நபர் கடத்தி, தொடர்ந்து 2 நாட்களுக்கு அச்சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திருப்பது தெரியவந்துள்ளது.
மீட்கப்பட்ட குழந்தையின் உடலில் பல காயங்கள் இருந்தன. மேலும், அவரது கழுத்தை அறுக்க முயற்சி மேற்கொள்ளபட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. அக்குழந்தை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிகிறது.
5 வயது சிறுமிக்கு இத்தகைய கொடூரத்தை செய்த நபரை தேடு முயற்சியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லியில் நாளுக்கு நாள் அதிகமாகும் பாலியல் குற்றங்கள் மக்களின் மனதில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
tamil.webdunia. thanks
No comments:
Post a Comment