20க்கு அரிசி வழங்கும் திட்டம் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்
அதன்படி, சென்னை நந்தனத்தில் உள்ள தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கிடங்கு வளாகத்தில் நடைபெற்ற விழாவில் கிலோ அரிசி ரூ20க்கு வழங்கும் திட்டத்தை ஏழை பயனாளிகளுக்கு வழங்கி முதல்வர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் காமராஜ், செல்லூர் ராஜு, மாதவரம் மூர்த்தி, சென்னை மேயர் சைதை துரைசாமி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மேலாண்மை இயக்குனர் சந்திர சேகர், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சீதாராமன், உணவு மற்றும் நுகர்பொருள் பாதுகாப்பு செயலாளர் நிர்மலா, உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழகம் முழுவதும் 171 இடங்களில் இன்று முதல் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. 143 கூட்டுறவு பண்டக சாலைகள், 22 அமுதம் அங்காடிகள் மற்றும் 6 சிறப்பு அங்காடிகள் என 171 கடைகளில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
சென்னையில் 19 இடங்களில் ரூ.20 அரிசி கிடைக்கும். படிப்படியாக தமிழகம் முழுவதும் 400க்கும் மேற்பட்ட கடைகளில் இத்திட்டம் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது
tamilmurasu thanks
No comments:
Post a Comment