அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Wednesday, 17 April 2013

மகளை உயிரோடு எ‌ரித்துக் கொன்ற தந்தை; மீஞ்சூரில் பயங்கரம்


FILE
குடிப்பதை தட்டிக் கேட்ட மகளை தந்தையமண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்சம்பவம் செ‌ன்னை‌யி‌ல் அதிர்ச்சியஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்த மீஞ்சூரில் தாய், தந்தையுடன் வசித்து வருபவர் நித்யா(19). இவரது தந்தை ஜெய்சங்கர் சம்பாதிக்கும் அனைத்தையும் குடித்து விடுவார், வீட்டு செலவுக்கு பணம் ஏதும் கொடுப்பதில்லை. இவரது நடவடிக்கையை நித்யாவும் அவரது தாயும் பலமுறை தட்டிக் கேட்டுள்ளனர். இதனால் தந்தையுடன் அடிக்கடி தகராறு ஏற்ப்பட்டு வந்தது.

இந்நிலையில் நித்யாவை பெண் பார்ப்பதற்காக மாப்பிள்ளை வீட்டார் நேற்று முன் தினம் வந்து சென்றுள்ளனர். சிறிது நேரத்தில் அங்கு குடிபோதையில் வந்த ஜெய்சங்கர் இதை பார்த்ததும் கோபமடைந்து மனைவியையும் மகளையும் அடித்துள்ளார். இதனை கண்டித்த மகளின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார். மகள் எரிந்த படி துடித்ததைப் பார்த்த ஜெய்சங்கர் அங்கிருந்து தப்பியோடினார்.

உடல் கருகிய நிலையில் நித்யா கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி நித்யா உயிரிழந்தார். அவரது மரண வாக்குமூலத்தில், தந்தை ஜெய்சங்கர் தான் தன்னை தீ வைத்து எரித்தார் என்று கூறியுள்ளார்.

இது குறித்து மீஞ்சூர் காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து ஜெய்சங்கரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்தி வருகின்றனர் காவல்துறையினர். மகளை தந்தையே உயிரோடு எரித்து கொன்ற சம்பவம் மீஞ்சூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

/tamil.webdunia thanks

No comments:

Post a Comment