on 17 April 2013.
இந்த
நிலையில் நேற்று ஒரே நாளில் 21 தீவிரவாதிகள் தூக்கிலிடப்பட்டனர். இந்த தகவலை அந்நாட்டு
நீதித்துறையின் அதிகாரி தெரிவித்தார். அவர்கள் அனைவரும் ஈராக்கை சேர்ந்தவர்கள்,
தீவிரவாத செயல்களில் ஈடுபட்டவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு கடந்த
மாதமே தண்டனை நிறைவேற்றப்பட்டு இருந்தது.
ஆனால்
அமெரிக்கா இங்கிலாந்து, ஐரோப்பிய யூனியன் நாடுகள், சர்வதேச மனித உரிமை குழுக்களின்
வேண்டுகோளை ஏற்று தண்டனை நிறைவேற்றம் தாமதப்படுத்தப்பட்டது. இருந்தும், கோரிக்கை
நிராகரிக்கப்பட்டு நேற்று 21 தீவிரவாதிகளும் தூக்கிலிடப்பட்டனர். தீவிரவாதிகளுக்கு
இந்த தண்டனை தொடரும் என நீதித்துறை மந்திரி ஹகன் அல்-ஷம்மரி தெரிவித்துள்ளார்.
இந்த
ஆண்டில் ஈராக்கில் இதுவரை 50 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளனர். ஈரானிலும் நேற்று 9 பேர் தூக்கிலிடப்பட்டனர். அவர்கள் அனைவரும்
தெற்கு பார்ஸ் மகாணத்தில் கொலை, கொள்ளை மற்றும் கடத்தல் சம்பவங்களில்
ஈடுபட்டவர்கள். 6 பேர் பொதுமக்கள் முன்னிலையிலும், 3 பேர் சிறையிலும் தூக்கிலிட்டு
கொல்லப்பட்டனர்.
உலக
நாடுகளில் மிக அதிக அளவில் மரண தண்டனை விதிக்கப்படும் நாடு எனக் கருதப்படும்
ஈராக்கில் கடந்த 2005 ஆம் ஆண்டிலிருந்து 447 பேருக்கும், 2012 ஆம் ஆண்டு மட்டும்
129 பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
News
: Source
/eutamilar thanks
No comments:
Post a Comment