'Wednesday, 17 April 2013 01:34

தங்களுக்கு எதிரான போராட்டங்களை தென் கொரியா தொடருமானால் எந்தவித முன்னறிவுப்பும் இன்றி தாக்குதல் நடத்தப்படும் என வடகொரியா இராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென் கொரிய தலைநகர் சியொலில் போராட்டக்காரர்கள் ஒன்றினைந்து வடகொரிய அதிபர் ஜிம் ஜாங் உன், முன்னாள் அதிபர்கள் கிம் ஜாங் இல், கிம் இல் சங் ஆகியோரின் உருவ பொம்மைகளை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். தென் கொரியா மற்றும் அமெரிக்கா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்துவோம் என வடகொரியா எச்சரித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் நடைபெற்றது.
அதிலும் குறிப்பாக வடகொரிய முன்னாள் அதிபர் கிம் இல் சங்கின் 101 வது ஆண்டு பிறந்த நாள் விழா கடந்த திங்கட்கிழமை கொண்டாடப்பட்ட நிலையில் அன்றைய தினமே தென் கொரியாவில் இப்போராட்டங்கள் நடைபெற்றன. இதையடுத்து ஆத்திரமடைந்துள்ள வடகொரிய இராணுவம், தென் கொரியாவுக்கு தனது இறுதி எச்சரிக்கையை விடுத்துள்ளது.
அதில் வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தென் கொரியாவுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால் எதிர்ப்பு நடவடிக்கைகளை கைவிட வேண்டும். வடகொரியாவுக்கு எதிரான செயல்களுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தென் கொரியாவும், அமெரிக்காவும் இணைந்து நடத்தி வரும் போர் ஒத்திகை பயிறியின் போது வடகொரிய எல்லையில் தென் கொரியாவுக்கு உள்பட்ட செயொல்வான் மாவட்டத்தில் அமெரிக்க ஹெலிகாப்டர் ஒன்று நொறுங்கி வீழ்ந்தது. எனினும் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 12 இராணுவ வீரர்களும் உயிர் தப்பிய்யுள்ளனர்.
கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இது குறித்து பேசுவதற்காக தென் கொரிய அதிபர் பார்க் கியூன் ஹையை எதிர்வரும் மே 7ம் திகதி அமெரிக்க அதிபர் ஒபாமா சந்திக்கவுள்ளார். இதையொட்டி தென் கொரிய அதிபரை வாஷிங்டன் வருமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
4tamilmedia. thanks
No comments:
Post a Comment