பிறந்து 3 நாளான குழந்தை உயிரோடு எரித்து நரபலி: தாய் உட்பட 4 பேர் கைது
[ வெள்ளிக்கிழமை, 26 ஏப்ரல் 2013, 07:42.50 மு.ப GMT ]
சிலி நாட்டில் உள்ள
வல்பரைசோ துறைமுகத்துக்கு அருகில் கொல்லிகுவே என்ற மலை பாங்கான பகுதிக்கு கடந்த
நவம்பர் மாதம் 21ம் திகதி அன்று வந்த 4 பேர் கொண்ட கும்பல், பிறந்து 3 நாளே ஆன ஒரு
குழந்தையை உயிரோடு எரித்து நரபலி கொடுத்துள்ளனர்.
இந்த கும்பலின் தலைவர் ரமோன் கஸ்டாவோ என்பவர் அந்த குழந்தை மதத்துக்கு எதிரானது
என்றும் இதனால் உலகம் அழியப் போகிறது எனவும் கூறி மற்றவர்களை நம்ப வைத்துள்ளார்.
இதையடுத்து அந்த குழந்தையின் தாயையும் நம்பவைத்து இந்த கொடூர உயிர் பலியை
அரங்கேற்றியுள்ளனர்.
பொலிசார் நடத்திய விசாரணையில் இந்த உண்மை வெளியாகி இருக்கிறது. கொலைசெய்யப்பட்ட
குழந்தையில் தாய் உட்பட 4 பேரை கைது செய்துள்ளனர்.
இது குறித்து பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், பிறந்து 3 நாட்களே ஆன அந்த
குழந்தையின் உடையை அகற்றி பலகையில் வைத்து ஆவிகளை அழைப்பதாக கூறி பூஜை
நடத்தியுள்ளனர். மேலும் குழந்தை சத்தம் போடாமல் இருக்க வாயில் டேப் சுற்றிய பின்னர்
குழந்தையை உயிரோடு எரித்து பலி கொடுத்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
சிலி நாட்டில் கடந்த 2005ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த கும்பலில் 12 உறுப்பினர்கள்
உள்ளனர். இவர்கள் அனைவரும் இது போன்ற தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்
என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
No comments:
Post a Comment