- Thursday, 25 April 2013 18:13

இந்தியாவுக்கு உட்பட்ட ஹிமாச்சல் பிரதேசத்தின் லதக்கில் சீனப்படைகள் பல கி.மீ தூரம் அத்துமீறி உள்நுழைந்து கூடாரம் அமைத்து தங்கியிருப்பதாக எழுந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள சீனா, ஊடகங்கள் தான் தேவையில்லாமல் பதற்றத்தை ஏற்படுத்த முனைகின்றன என குற்றம் சாட்டியுள்ளது.
குறித்த சம்பவம், இந்திய - சீன இரு தரப்பு பேசுவார்த்தையில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்த போவதில்லை எனவும், இந்த புதிய எல்லைப்பிரச்சினையை இரு நாட்டு இராணுவமும் சுமூகமான நட்புறவு ரீதியிலான பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவே முனைகின்றன எனவும் சீனா கூறியுள்ளது.
லதக்கின் தெஸ்பாங் பள்ளத்தாக்கின் ஊடாக சீன படைகள் இந்தியாவினுள் அத்துமீறி உள்நுளைந்திருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து சீன வெளியுறவு துறையின் பேச்சாளர் ஹூவா சங்யிங்கிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது,
'சீனா தான் இப்பதற்றத்தை ஊக்குவிக்கிறது எனும் குற்றச்சாட்டுக்களை தான் ஏற்க மாட்டேன் என்றார். சீன படைகள் ஒரு போதும் எல்லைப்பகுதியை கடந்தது இல்லை. சீனாவும் இந்தியாவும் நட்புறவு நாடுகள். எமது எல்லைப்பகுதிகள் இன்னமும் தெளிவாக வரையறுக்கப்படவில்லை. இரு நாடுகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ள இச்சிறிய சலசலப்பை நட்பு ரீதியில் தீர்த்துக்கொள்ளவேண்டும் என விரும்புகிறோம்.
ஊடகங்கள் இவ்விடயத்தில் அமைதியை கடைப்பிடித்து பிரச்சினை சுமூகமாக முடிவுக்கு வர வழிவகுக்க வேண்டும். இப்போது எல்லைப்பகுதி அமைதியாகவும், நிலையானதாகவும் இருப்பதை நாங்களுக்கு உங்களுக்கு கூறவிரும்புகிறேன். இரு நாட்டு எல்லைப்பகுதி தொடர்பிலான ஒப்பந்தங்கள், நடைமுறைகளுக்கு சீனா கடுமையாக கீழ்படிவதை உங்களுக்கு நினைவுறுத்த விரும்புகிறேன் என்றார்.
இந்தியா அப்பகுதியில் மேற்கொண்டுவரும் சில வலுவூட்டல் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என சீனத்துருப்புக்கள் கூறியிருக்கின்றனவே, என நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பிய போது, நான் ஒன்றும் எல்லை காவல்படையில் நிற்கவில்லை. அவர்களது இறுதி நடவடிக்கை பற்றி எனக்கு தெரியாது.
ஆயினும், இந்தியாவும் - சீனாவும் இப்பிரச்சினையை நட்புரீதியில் தீர்க்கவே முனைகின்றன என்பதை உறுதியாக கூற முடியும் என்றார். சீனத்துருப்புக்கள் மீது தவறிருப்பதாக உணர்ந்திருப்பதாலேயே இப்போது நட்புரீதியில் பேச்சுவார்த்தை நடத்துவோம் என சீன கூற முனைகிறதா என இந்திய அரசியல் ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
4tamilmedia thanks
No comments:
Post a Comment