அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Monday, 1 April 2013

34 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆரம்பமாகிய எகிப்து-ஈரான் விமான சேவை

[ திங்கட்கிழமை, 01 ஏப்ரல் 2013, 
டெக்ரானில் கடந்த 1979ம் ஆண்டு இஸ்லாமிய புரட்சி ஏற்பட்டதைத் தொடர்ந்து கடந்த 34 ஆண்டுகளாக எகிப்து நாட்டுக்கும், ஈரானுக்கும் இடையேயான பயணிகள் விமான சேவை துண்டிக்கப்பட்டது. எகிப்தில் முபாரக் ஆட்சி கடந்த 2010ம் ஆண்டு வீழ்த்தப்பட்ட பின்னர் இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் நேரடி விமான சேவையை தொடங்க முடிவு செய்யப்பட்டது.
ஆனால் விமானம் விடப்படவில்லை. தொடர்ந்து கடந்த 2012ம் ஆண்டு எகிப்து  ஜனாதிபதி முகமது முர்சி தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் நல்லதொரு மாறுதல் ஏற்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையே இணக்கமான போக்கு ஏற்பட்டது.
ஈரான் ஜனாதிபதி மகமது அகமதிநேஜாத், எகிப்துக்கு கடந்த மாதம் பயணம் மேற்கொண்டார்.
இந்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையேயான பயணிகள் விமான சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. எகிப்து நாட்டின் கெய்ரோ நகரில் இருந்து ராமி லக்காவின் ஏர் மெம்பிஸ் விமானம், ஈரான் தலைநகர் டெக்ரான் நோக்கி புறப்பட்டுச் சென்றது.

newsonews thanks

No comments:

Post a Comment