அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Monday, 29 April 2013

அக்னி நட்சத்திரம் மே 4-ந் திகதி தொடங்குகிறது


 அக்னி நட்சத்திரம் மே 4-ந் திகதி தொடங்குகிறது

April 29, 2013  09:42 am

வழக்கமாக கோடை காலத்தில் அதிக வெயில் உள்ள காலம் அக்னி நட்சத்திர காலமாகும். ஆனால் சில வருடங்களில் அக்னி நட்சத்திரத்தின் போது கோடை மழை பெய்வது உண்டு. இந்த வருடம் அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே வெயில் அதிகமாக அடிக்கிறது.



 குறிப்பாக மதுரை, திருச்சி, வேலூர் ஆகிய இடங்களில் வெயில் கொளுத்துகிறது. இந்த வருடம் அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் ´கத்திரி வெயில்´ மே மாதம் 4-ந் திகதி தொடங்குகிறது. அக்னி நட்சத்திரம் மே மாதம் 28-ந் திகதி முடிவடைகிறது.

அக்னி நட்சத்திரத்தை பொறுத்தவரை 25 நாட்கள் இருக்கிறது. இதில் முதல் 10 நாட்களைவிட அடுத்த 10 நாட்கள் வெயிலின் தன்மை மிக அதிகமாக இருக்கும். கடைசி ஒரு வாரம் வெயிலின் கடுமை சற்று குறைவாக இருக்கும். இந்த அக்னி நட்சத்திர நாட்களில் பகலில் குழந்தைகள், வயதானவர்களை வெளியில் அனுப்பாமல் இருப்பது நல்லது.

அக்னி நட்சத்திர காலத்தில் புதிதாக வீடு குடிபுகுவதையும் பலர் விரும்புவதில்லை. சென்னையில் நேற்று வெயில் அதிகமாக காணப்பட்டது. இருப்பினும் மதியத்திற்கு மேல் கடல்காற்று வீசத்தொடங்கியது. அதனால் மாலை 3 மணிக்கு மேல் சென்னை நகரில் வெப்பம் சற்று தணிந்தது. மாலையில் மெரினா கடற்கரையில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

thamilan thanks

No comments:

Post a Comment