தீப்பிடித்த தனியார் பஸ்ஸில் இருந்து உயிர் தப்பிய 60 பயணிகள்
[ புதன்கிழமை, 03 ஏப்ரல் 2013, 08:15.31 AM GMT +05:30 ]
தேனியிலிருந்து மதுரைக்குப் புறப்பட்டுச் சென்ற தனியார் பஸ்ஸில் தீப்பிடிக்கத்
தொடங்கியதும், சாரதியின் சாமர்த்தியத்தால் பஸ்ஸிலிருந்த பயணிகள் அனைவரும்
காப்பாற்றப்பட்டுள்ளனர் .
இன்று பகல் 12.15 மணி அளவில் தேனியில் இருந்து மதுரைக்கு 60 பயணிகளை ஏற்றிக்
கொண்டு தனியார் பஸ் ஒன்று புறப்பட்டது.
கதிரியகவுண்டன்பட்டி என்ற இடத்தில் பஸ் சென்ற கொண்டிருந்த போது என்ஜினில்
திடீரென தீப்பிடித்துள்ளது. இதை கவனிக்காமல் பஸ்ஸின் சாரதியும் பஸ்சை ஓட்டி
சென்றார்.
சிறிது நேரத்தில் பஸ்சின் முன்பகுதியில் இருந்து புகை மூட்டமாக எதிரே சாலையே
தெரியாத அளவிற்கு கிளம்பியது. இதை பார்த்ததும் ரோட்டில் சென்றவர்களும் எதிரில்
வாகனங்களில் வந்தவர்களும் டிரைவரிடம் சைகை காட்டி பஸ்சை நிறுத்த கூறினர்.
இதனிடையே பஸ் முழுவதும் புகை மூட்டம் ஏற்பட்ட தீ பிடிக்க தொடங்கியது. அதிர்ச்சி
அடைந்த பஸ்சில் பயணம் செய்த பயணிகள் அலறியடித்து பஸ்சை விட்டு கீழே இறங்கி ஓட்டம்
பிடிக்க தொடங்கினர். இது குறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல்
தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு படைவீரர்கள். பஸ்சில்
ஏற்பட்ட தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் பஸ்சின் முன்பக்க இருக்கைகள் முற்றிலும் எரிந்து சாம்பலானது.
உரிய நேரத்தில் தீ அனைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இதனால் பஸ்சில் பயணம் செய்த 60 பயணிகள் உயிர் தப்பினர்.
No comments:
Post a Comment