அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Wednesday, 3 April 2013

மினி லாரி மோதி முதியவர் சாவு



03 April 2013
ராமநாதபுரம் அருகேயுள்ள தேவிபட்டினத்தில் முதியவர் மீது மினி லாரி மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

  தேவிபட்டினம் ஆர்.சி. தெருவைச் சேர்ந்த பாக்கியம் (70) தனது வீடு அருகே செவ்வாய்க்கிழமை நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சமையல் எரிவாயு  சிலிண்டர் ஏற்றிய மினி லாரி ஒன்று பின்பக்கமாக வந்தது.
  பாக்கியம் நடந்து வருவது தெரியாமல், அவர் மீது மோதியது. இதில் பாக்கியம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
  உறவினர்கள் விபத்து நடந்த இடத்தில் கிடந்த முதியவரின் சடலத்தை எடுக்க விடாமல் சிறிது நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர். மினி லாரியின் உரிமையாளரையும், டிரைவரையும் உடனே கைது செய்ய வேண்டும் என்று கூறி கோஷங்களை எழுப்பினர்.
  ராமநாதபுரம் டி.எஸ்.பி. முரளீதரன், இன்ஸ்பெக்டர்கள் சரவணன் (தேவிபட்டினம்), கணேசன் (ராமநாதபுரம் பஜார்) ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து சடலத்தைப் போலீஸார் கைப்பற்றி  ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனை செய்ய கொண்டு வந்தனர்.
  தேவிபட்டினம் சப்-இன்ஸ்பெக்டர் முத்துச்செல்வம் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கிறார்.

dinamani thanks

No comments:

Post a Comment