
April 25,
2013 12:40 pm
இந்தியாவின், ராஜஸ்தான் மாநிலத்தில் 7 வயது சிறுமி ஒருவரை
பாலியல் பலாத்காரம் செய்ய முற்பட்ட, முதியவர் ஒருவரை அந்த ஊர் மக்களே அடித்து
கொன்றுள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம், ஹனுமன்கார்க் மாவட்டம், குடியா
கிராமத்தைச் சேர்ந்த திரிலாக் சிங் (53). இவர் தனது பக்கத்து வீட்டில் உள்ள 7 வயது
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முற்பட்டார்.
அப்போது, சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு, அவ்வீட்டிற்கு விரைந்த
மக்கள், சிறுமியிடம் அந்த முதியவர் தகாத முறையில் நடந்துகொள்ள
முயன்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக அச்சிறுமியை மீட்ட ஊர் மக்கள், சரமாரியாக அந்த முதியவரை தாக்கினர். இதனால் பலத்த காயமடைந்த
அந்த முதியவர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார்.
ஆனால், அவர்
சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
thamilan. thanks
No comments:
Post a Comment