
April 25, 2013 02:24 pm
மலேசியாவில் தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் தனது குடும்பத்தோடு
ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது மர்ம நபர்களால் கொடூரமாக
சுட்டுக்கொல்லபட்டுள்ளார்.
சம்பவத்தில் பலியானவர் ஏ.சிவா (வயது 36), என்ற
டாக்சி டிரைவர். இவர் தனது மனைவி,8 வயது
மகளுடன் மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் வசித்து வந்தார்.
சம்பவத்தன்று தனது குடும்பத்துடன் ஒரு உணவு விடுதியில்
சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த 2 முகமூடி ஆசாமிகள் சிவாவை
சரமாரியாக சுட்டு கொன்று விட்டு தப்பிசென்றுள்ளதாக தெரிகிறது.
மற்றொரு
நபரை சுட்டுக்கொல்லும் முயற்சியில் சிவா தவறுதலாக பலியாகி இருக்கக்கூடும் என
பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
இந்த
சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தீவிரமாக தேடி
வருகின்றனர்.
விசாரணையில், சிவா
மர்ம நபர்களால் 4 முறை சுடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
thamilan thanks
No comments:
Post a Comment