அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Wednesday, 24 April 2013

பங்களாதேஷில் 8 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது: 30 பேர் பலி!


on 24 April 2013.

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவின் புறநகர் பகுதியில் உள்ள 8 அடுக்கு வணிக வளாகம் இடிந்து விழுந்த விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் பலியானதாக அஞ்சப்படுகிறது. டாக்காவில் இருந்து 30 கி.மீட்டர் தொலைவில் உள்ள சவார் பகுதியில் ராணா பிளாசா என்ற பெயரில் 8 மாடி வணிக வளாகம் உள்ளது.

இந்த கட்டிடத்தில் நேன்று திடீரென விரிசல் ஏற்பட்டது. இதனையடுத்து இங்குள்ள கடைகளில் யாரையும் அனுமதிக்க வேண்டாம் என்ற உள்ளாட்சி நிர்வாகத்தின் எச்சரிக்கையை கட்டிட உரிமையாளர்கள் பொருட்படுத்தவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று காலை அந்த கட்டிடம் பயங்கர சப்தத்துடன் இடிந்து விழுந்தது.


இந்த விபத்து நேர்ந்த போது கட்டிடத்தின் உள்ளே இருந்த ரெடிமேட் ஆடை தொழிற்சாலையில் நூற்றுக்கணக்கான பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தார்கள். கட்டிடம் இடிந்த தகவல் கிடைத்ததும் மீட்புப் படையினர் விரைந்து வந்து பணிகளில் ஈடுபட்டனர். இடிபாடுகளில் சிக்கி 30க்கும் மேற்பட்டோர் பலியானதாகவும் சுமார் 200 பேர் காயமடைந்ததாகவும் முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன.

News : Source


eutamilar. thanks

No comments:

Post a Comment