Wednesday, 24 April 2013 12:58

தங்கம், கச்சா எண்ணெய் விலை சமீபகாலமாக குறைந்து கொண்டே வருகிறது. இது 2013ம் நிதி ஆண்டில் இந்தியாவின் நடப்பு கணக்கு பற்றாக்குறை 4.3 சதவிகிதமாக குறைய உதவும் என்று ஜப்பானை சேர்ந்த தொமுரா நிறுவனம் தெரிவித்துள்ளதாகத் தெரிய வருகிறது.
இது குறித்து அந்நிறுவனம் கூறியுள்ளதாவது, 'ஏற்றுமதிக்கும், இறக்குமதிக்கும் உள்ள வித்தியாசமே நடப்பு கணக்கு பற்றாக்குறை என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவில் 2012-13 நிதியாண்டின் டிசம்பர் மாதத்தில் நடப்பு கணக்கு பற்றாக்குறை என்று சொல்லப்படும் கேட் இதுவரை இல்லாத அதிக பட்ச அளவாக 6.7 சதவிகிதமாக இருந்தது.
இது தொழில் துறையினர், ஏற்றுமதியாளர்கள், ஆட்சியாளர்கள் என அனைவரையும் வருத்தத்தில் ஆழ்த்தியது. பின்னர் நிதி ஆண்டு முடிவில், கடந்த 15 நாட்களில் தங்கம், கச்சா எண்ணெய் விலை மிகவும் குறைந்துள்ளது. இதனால் கேட் ஒரு சதவிகிதம் வரை குறைந்து 4 சதவிகிததை எட்டும். இதன் மூலம் மொத்த விலை குறியீடு அடிப்படையிலான பணவீக்கம் குறையும்.
தங்கம் விலை குறைந்ததால் ரூபாய் 48 ஆயிரத்து 600 கோடி வரை இறக்குமதி செலவு குறையும்.' என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
4tamilmedia thanks
No comments:
Post a Comment