அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Saturday 27 April 2013

பாஸ்டன் விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட உத்தரப் பிரதேச அமைச்சர் - இந்தியா கடும் எதிர்ப்பு



அமெரிக்காவின் ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தில் ஒரு நிகழ்ச்சிக்குப் பங்கேற்பதற்காக இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தின் நகர அபிவிருத்தி அமைச்சரான மொஹம்மட் அஷாம் கான் பாஸ்டன் விமான நிலையத்தில் தடுத்து வைக்கப் பட்டு தொல்லைகளுக்கு உள்ளாகினார்.

இதற்கு இந்தியா உத்தியோகபூர்வமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தில் இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் நடக்கும் உலகில் மிக அதிக எண்ணிக்கையான மக்கள் பங்கேற்கும் புனித யாத்திரையான கும்பமேளா குறித்த கல்வி ஆராய்ச்சிக்கு உத்தரப் பிரதேச அமைச்சர் அகிலேஷ் யாதவ் சார்பாக இவர் விஜயம் செய்திருந்தார்.

முதலில் 10 நிமிடங்கள் விமான நிலையத்தில் தடுத்து வைக்கப் பட்டு விசாரணை நடத்திய பின் அமெரிக்க குடிவரவுத் திணைக்களத்தின் ஹோம்லாண்ட் பிரிவின் பெண் அதிகாரி ஒருவர் மூலம் தனியே ஓர் அறைக்கு அழைத்துச் செல்லப் பட்டு விரிவான விசாரணைக்கு உட்படுத்தப் பட்டுள்ளார். தனது பெயரின் மூலம் தான் ஒரு முஸ்லிம் எனத் தெரிந்து கொண்டதனால் தான் தன்னை இவ்வாறு விசாரணைக்கு உட்படுத்துகின்றார்கள் என அறிந்த அமைச்சர் அதிகாரிகளுடன் கடும் வாதத்தில் ஈடுபட்டதாகவும் பின்னர் நியூயோர்க்கிலுள்ள இந்திய தூதர அதிகாரிகள் தொடர்பு கொண்டு அளித்த விளக்கத்துக்குப் பின்னர் விமான நிலைய அதிகாரிகள் இவரை விடுவித்தாகவும் கூறப்படுகின்றது.

எனினும் இச்சர்ச்சை இன்று இந்தியப் பாராளுமன்றத்தில் சமாஜ்வாதி கட்சியினால் தமது தலைவரைத் துன்புறுத்தப் பட்டார் என்ற ரீதியிலும் இதற்கு இந்தியா கண்டனம் தெரிவிக்க வேண்டும் எனவும் வாதம் முன்னெடுக்கப் பட்டது. இதேவேளை இப்பிரச்சினை இதுதான் முதற் தடவையல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த வருடம் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நியூயோர்க் விமான நிலைய அதிகாரிகளால் தான் ஒரு முஸ்லிம் என்பதால் சுமார் 2 மணித்தியாலங்கள் வரைத் தடுத்து வைக்கப் பட்டிருந்தார். இதைவிட இந்தியாவுக்கு அவமானமான விடயம் யாதெனில் இந்தியாவின் முன்னால் ஜனாதிபதி அப்துல் கலாம் நியூயோர்க் JFK விமான நிலையத்தில் இரு முறை அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளால் தடுத்து வைக்கப் பட்டு உடல் முழுவதும் சோதனை செய்யப் பட்டிருந்தார் என்பதாகும்

.4tamilmedia. thanks

No comments:

Post a Comment