அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Saturday 27 April 2013

ஆழ்குழாய் கிணற்றில் உயிருக்கு போராடும் சிறுமி!



ஆழ்குழாய் கிணற்றில் உயிருக்கு போராடும் சிறுமி!
கரூர்: கரூர் அருகே 600 அடி ஆழ கிணற்றில் 7வயது சிறுமி ஒருவர் தவறி விழுந்து உயிருக்குப் போராடி வருகிறார். அவரை மீட்கும் பணி தீவிரமடைந்துள்ளன
.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள சூரிப்பாலி கிராமத்தில் சில மாதங்களுக்கு முன் ஆழ் குழாய் கிணறு போடப்பட்டது, ஆனால் திடீரென அந்தப் பணி கைவிடப் பட்டு அக்கிணறு ஒரு கோணிப் பை மூலம் மூடப் பட்டது.
இந்த நிலியில் இன்று காலை 9 மணியளவில் இந்தக் கிணற்றுக்கு அருகே வேலைசெய்து வந்த பாண்டியன் என்ற விவசாயியின்  7 வயது மகள் முத்துலட்சுமி அங்கு விளையாடிக் கொண்டு இருந்தபோது. குழாய் கிணறை மூடி இருந்த கோணிப்பையில் கால் வைத்தார். இதில் கோணிப்பை கிழிந்து குழாய் கிணற்றுக்குள் சிறுமி விழுந்து விட்டாள். சிறுமி அலறியவாறு உள்ளே விழுந்தாள். சத்தம் கேட்டு தந்தை பாண்டியன் ஓடி வந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உதவியுடன் சிறுமியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
ஆனால் முயற்சி பயனற்று போகவே, தீயணைப்பு வீரர்களுக்கும் காவல்துறையினருக்கும் தகவல் கொடுக்கப் பட்டது.  தகவல் கிடைத்து அந்த இடத்திற்கு தீயணைப்பு மற்றும் மீட்புப்படை வீரர்கள் உடனடி மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
உடன்  108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு குழிக்குள் ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருகிறது. அதே நேரத்தில்சிறுமி வீழ்ந்துள்ள பள்ளத்தின் அருகே 3 பொக்லைன் இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டு பள்ளம் தோண்டப்படுகிறது.இதன் மூலம் சிறுமியை மீட்கும் முயற்சி நடந்து வருகிறது.
ஆழ்குழாய்க் கிணற்றில் விழுந்த குழந்தையின் அசைவை கண்ணகாணிக்க கேமரா செலுத்தப்பட்டது. கேமரா காட்சிகள் பதிவினை ஆராய்ந்த போது குழந்தை தலைகீழாக இருப்பது தெரியவந்தது. கிணற்றில் விழுந்து 6 மணி நேரத்திற்கு மேலாக ஆனதால் குழந்தை மயக்க நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

inneram thanks

No comments:

Post a Comment