பேஸ்புக்கின் மூலம் பச்சிளம் குழந்தை விற்பனை செய்தது அம்பலம்
[ புதன்கிழமை, 24 ஏப்ரல் 2013,
பிறந்து
மூன்று நாட்களேயான பச்சிளம் குழந்தையை பேஸ்புக்கின் மூலம் ரூ.8 லட்சத்துக்கு
விற்பனை செய்தது தற்போது தெரியவந்துள்ளது.
பஞ்சாப்பின் லூதியானா பகுதியில் பிறந்து 3 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை அதன்
தாத்தா, பேஸ்புக் மூலம் டில்லியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு ரூ.8 லட்சத்திற்கு
விற்பனை செய்துள்ளார்.
ஆனால் இந்த விடயம் அக்குழந்தை தாய்க்கு தெரியவில்லை. குழந்தை இறந்து விட்டதாக
தன்னிடம் தனது தந்தை கூறியதாக அக்குழந்தையின் தாய் தெரிவித்துள்ளார்.
மேலும் குழந்தையை விற்பனை செய்ய உதவிய மருத்துவமனை ஊழியர் ஒருவருக்கு அவர்
ரூ.45,000 பணம் கொடுத்துள்ளதும் தெரியவந்துள்ளது.
மருத்துவமனை பெண் ஊழியர் குழந்தையை தூக்கி வந்து குர்பிரீத் சிங் என்ற
மருத்துவமனை லேப் பணியாளரிடம் கொடுத்துள்ளார்.
அவர் பேஸ்புக் மூலம் டில்லி தொழிலதிபருக்கு குழந்தையை விற்றுள்ளார்.
குழந்தை காணாமல் போனதாக குழந்தையின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் நடைபெற்ற
விசாரணையில் இந்த உண்மை அம்பலமாகி உள்ளது
No comments:
Post a Comment