அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Monday, 1 April 2013

டெல்லி பாலியல் சம்பவத்தை அடுத்து கடுமையாக வீழ்ச்சியடைந்தது இந்திய சுற்றுலாத் துறை



சமீபத்தில் டெல்லியில் ஓடும் பஸ்ஸில் நடைபெற்ற் பாலியல் பலாத்காரம், இரு சுற்றுலா பயணிகள் எதிர்கொண்ட பாலியல் தாக்குதல்கள் என்பவற்றை அடுத்து நாட்டின் பல பாகங்களிலும் இடம்பெற்று வரும் இது போன்ற சம்பவங்களால் அச்சமடைந்துள்ளதால் சுற்றுலாப் பயணிகளின் இந்திய வருகை வீழ்ச்சியடைந்துள்ளது
.
2013 ஆம் ஆண்டின் முதல் 3 மாதங்களில் மட்டும் சுற்றுலாத் துறையில் 25% வீத வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதற்குக் காரணமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குப் போதிய பாதுகாப்பு இந்தியாவில் இல்லை எனும் நிலமை தோன்றியுள்ளமை கூறப்படுகின்றது.

மேலும் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் பெண் சுற்றுலாப் பயணிகளின் வருகை மட்டும் 35% வீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. இது குறித்து இந்திய சுற்றுலாத்துறை இயக்குனர்கள் கூறுகையில் ஜனவரியில் இருந்து மார்ச் வரை பாலியல் அச்சுறுத்தல் பயம் காரணமாக சுற்றுலாப் பயணிகள் ஏற்கனவே திட்டமிட்டிருந்த பல பயணங்களை ரத்து செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் 6 வெளிநாட்டுப் பெண்மணிகள் போலிசாரிடம் தாம் இந்தியாவில் வைத்து இனம் தெரியாத நபர்களினால் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப் பட்டதாகவும் இதில் அதிகளவு துன்புறுத்தல்கள் முக்கிய சுற்றுலாத் தலங்களிலேயே இடம்பெற்றதாகவும் இந்தியப் போலிசாரிடம் முறைப்பாடு தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து இங்கிலாந்து உட்பட பல முக்கிய நாடுகள் தமது நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளை இந்தியாவில் ஜாக்கிரதையாக இருக்கும் படி அறிவுரை வழங்கியுள்ளன.

உலகளாவிய பொருளாதார வீழ்ச்சிக்கு மத்தியிலும் இந்தியா 2012 ஆம் ஆண்டு $17.7 பில்லியன் டாலர்கள் சுமார் 6.6 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் மூலம் வருமானம் ஈட்டியுள்ளதாகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. 2016 ஆம் ஆண்டளவில் 12% வீத அதிகரிப்பை சுற்றுலாத் துறையில் திட்டமிட்டுள்ள இந்திய அரசு இதன் மூலம் தற்போது உள்ளதை விட இரட்டிப்பு வெளிநாட்டு வருமானத்தைப் பெறத் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

4tamilmedia. thanks

No comments:

Post a Comment