
April 1,
2013 05:05 pm
இந்தியத் தலைநகர் டெல்லியில் சிறுமி ஒருவர் காரில்
கடத்தப்பட்டு,
மயங்கிய நிலையில் பாலியல் வன்கொடுமைக்கு
உட்படுத்தபட்டுள்ளார்.
டெல்லி
நொய்டா அருகில்,
கடைக்கு சென்று வீடு திரும்பிய சிறுமியை காரில் கடத்திய நபர்
அச்சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக
கூறப்படுகின்றது.
இக்கொடுமையில் ஈடுபட்டது அச்சிறுமியின் பக்கத்து வீட்டில்
வசிப்பவர் ஆவார். நொய்டா பகுதியில் ஒரு தனியார் மருத்துவமனையில் முகாமையாளராக
பணிபுரியும் இவர்,
சம்பவத்தன்று கடைக்கு சென்று வீடு திரும்பிகொண்டிருந்த
சிறுமியை தனது மாருதி ஆல்டோ காரில் கடத்தியுள்ளார்.
பின்னர்
அச்சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்த அவர், சிறுமி
மயங்கியதும் அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்டதன்
பேரில், குற்றவாளியை கைது செய்த பொலிசார் அவரிடம் தீவிர விசாரணை
மேற்கொண்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி சுய நினைவின்றி மருத்துவமனையில்
சிகிச்சை பெற்று வருகிறார்.
thamilan. thanks
No comments:
Post a Comment