
தமிழகத்தில் ஐ.ஓ.சி. உள்ளிட்ட பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு 1.46 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். இதில், சென்னையில் மட்டும் ஐ.ஓ.சி.க்கு, 20 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
மாதந்தோறும் சராசரியாக 10 முதல் 11 பேர் லட்சம் பேர் சமையல் கேஸ் சிலிண்டர் வேண்டி முன்பதிவு செய்கின்றனர். இவர்களுக்கு மானிய விலையில் 398 ரூபாய்க்கும், மானியம் அல்லாமல் 891 ரூபாய்க்கும், சிலிண்டர் விநியோகம் செய்யப்படுகிறது.
மத்திய அரசு கடந்த செப்டம்பர் மாதம் "ஒரு குடும்பத்துக்கு, ஆண்டு ஒன்றுக்கு, மானிய விலையில் ஆறு சிலிண்டர் மட்டுமே வழங்கப்படும்" என அறிவித்தது. இதற்கு, நாடு தழுவிய அளவில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து, கடந்த ஜனவரியில் மானிய விலையில் வழங்கப்படும் சிலிண்டர்களின் எண்ணிக்கையை 9 ஆக மத்திய அரசு உயர்த்தியது.
இதன்படி, நடப்பு நிதியாண்டில் கடந்த 1 ஆம் தேதி முதல், ஒரு குடும்பம் ஆண்டுக்கு 9 கேஸ் சிலிண்டர்களை மானிய விலையில் பெற முடியும்.
இதுகுறித்து, ஐ.ஓ.சி. நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், கேஸ் சிலிண்டர் விநியோகிக்கப்படும் தேதியின் அடிப்படையில் தான், மானிய விலை சிலிண்டர்களின் எண்ணிக்கை கணக்கிடப்படும்.
மார்ச் முதல் வாரத்தில் சமையல் கேஸ் சிலிண்டர் வேண்டி 11.50 லட்சம் பேர் பதிவு செய்தனர். இதில், 90 சதவீதம் பேருக்கு விநியோகம் செய்யப்பட்டது. மானியம் அல்லாத சிலிண்டர் வேண்டி பதிவு செய்தவர்களுக்கு, தற்போது சிலிண்டர் விநியோகம் செய்தால், சந்தை விலையே வசூலிக்கப்படும். ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு பின் வாங்கினால், மானிய விலையில் கிடைக்கும் என தகவல் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, பதிவு செய்த பெரும்பாலானோர் ரத்து செய்தனர். இதனால், கடந்த மாதம் பதிவு செய்து, தற்போது சிலிண்டர் பெறுவோருக்கு, நடப்பு நிதியாண்டிற்கான மானிய விலை சிலிண்டரை 10 ஆக உயர்த்தி வழங்கப்படாது என்று அவர் தெரிவித்தார்.
வாடிக்கையாளர்களுக்கு தாமதமாக சிலிண்டர் சப்ளை செய்தது குறித்து டி.யு.சி.எஸ். அதிகாரி ஒருவர் கூறுகையில், ஒரு சிலிண்டர் விற்பனை செய்தால் கமிஷன் தொகையாக ரூ.37 கிடைக்கிறது. இதனால், லாரி ஸ்டிரைக் தவிர மற்ற நாட்களில் வேண்டுமென்றே தாமதமாக சப்ளை செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
ரேஷன் கடையில் ஒரு மாதம் அரிசி வாங்க தவறினால் அடுத்த மாதம் சேர்த்து வினியோகிக்கப்படாது. இது சமையல் சிலிண்டருக்கும் பொருந்தும் என்று அந்த கூறினார்.
tamil.webdunia. thanks
No comments:
Post a Comment