பொஸ்டன் நகர குண்டு வெடிப்பு: சம்பந்தப்பட்ட நபர் கைது
ஏப்ரல் 2013,
பொஸ்டன் நகரில் கடந்த திங்கட்கிழமை
நடைபெற்ற மரதன் பந்தயத்தின் பொழுது நிகழ்ந்த குண்டு வெடிப்பு தாக்குதலில் 3 பேர்
பலியானத்துடன் 176 பேர் படுகாயமடைந்தனர்.
கருப்புநிற கைப்பையில் குக்கர்களில் அடைக்கப்பட்ட வெடிப்பொருட்களை ரிமோட் மூலம்
இயக்கி இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்பது தடவியல் சோதனையின் மூலம் தெரிய வந்தது.
இதனையடுத்து, குண்டு வெடித்த இடத்தின் சுற்றுப்புறங்களில் உள்ள சி.சி.டி.வி.
கமெரா பதிவுகளை பொலிசார் தீவிரமாக சோதனையிட்டனர்.
குறிப்பாக கருப்பு பைகளுடன் செல்லும் நபர்களின் நடமாட்டத்தை முக்கியமாக
கண்காணித்தபொழுது, குண்டு வெடித்த இடத்தில் ஒருவர் கருப்பு பையை வைத்துவிட்டு
சென்றது 2 கமெராக்களில் பதிவாகியுள்ளது.
அந்நபரைப் பற்றிய அடையாளங்களை சேகரித்த பொலிசார், சந்தேகத்திற்குரிய அவரை கைது
செய்துள்ளனர். அவர் யார், எந்த நாட்டை சேர்ந்தவன், இந்த தாக்குதலை நடத்தியது ஏன்
என்பது குறித்த விபரங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.
No comments:
Post a Comment