அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Wednesday, 3 April 2013

கூடங்குளம் அணுமின்நிலைய ஊழியர்களையும் காப்பாற்ற போராட்டம்: உதயகுமார்



பதிவு செய்த நாள் -
ஏப்ரல் 03, 2013  
 
கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி, அணுஉலை எதிர்ப்பாளர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்காமல், அணுமின் நிலையத்தைத் திறக்கக்கூடாது என அவர்கள் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

செட்டிக்குளத்தில் உள்ள கூடங்குள அணுமின்நிலைய ஊழியர்கள் வீடுகளை கடல்வழியாகச் சென்று முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
முன்னதாக போராட்டம் குறித்து புதியதலைமுறைக்கு அணுஉலை போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் அளித்த பிரத்யேக பேட்டியில் : கூடங்குளம் அணுமின்நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்காகவும் இந்தப் போராட்டம் நடத்தப்படுவதாக தெரிவித்தார். நேற்று கூட்டபுளி கிராமத்தில் மக்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால், கடைசி நேரத்தில் தங்கள் போராட்டத்தை கடல்வழியாக எடுத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கூடங்குளம் அணுமின்நிலைய ஊழியர்களுக்கு எங்களது வேதனையையும் பிரச்னையை எடுத்துரைப்பதற்காகவே கூடங்குளம் அணுமின்நிலைய ஊழியர்கள் வீடுகளை முற்றுகையிடுகிறோம் என்றார்.
கூடங்குளம் அணுமின் நிலைய ஊழியர்கள் தங்களுக்கு எதிரிகள் அல்ல என்றும், தங்களது எதிரி மத்திய அரசின் தவறான கொள்கை தான் என்றும் கூறினார்.மத்திய அரசு தமிழக மக்களை சோதனை எலிகளாக பார்ப்தாகவும் குற்றஞ்சாட்டினார். அறவழியில் போராட்டத்தை மேற்கொள்ளும் தங்களுக்கு காவல்துறையினரும், தமிழக அரசும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
மேலும் தங்களது அடுத்தக்கட்ட போராட்டம் இதை விட தீவிரமாக இருக்கும் என்றும் அந்த போராட்டம் மத்திய அரசை கவிழ்க்கும் அளவில் இருக்கும் என்றும் தெரிவித்தார்.
கூடங்குளம் அணுமின்நிலையம் ரஷ்ய அதிபர் புடின் அனுப்பி வைத்த பிணம். அந்தப் பிணத்தை வைத்து இங்கே போஸ்ட் மார்டம் நடைபெறுகிறது என கடுமயைாக விமர்சித்தார். தமிழர்களைத் தொடர்ந்து பரிசோதனை எலிகளாக பயன்படுத்த மத்திய அரசை அனுமதிக்க மாட்டோம் என்றார்.
பாதுகாப்பு பலம்: அணுஉலை எதிர்ப்பாளர்களின் போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, கூடங்குளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மத்திய அதிரடிப்படை, மத்திய தொழிற்படை, தமிழக அதிரப்படை என 2000 த்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கடந்த மாதம் 24 ஆம் தேதி தொடங்கிய சோதனை ஓட்டம், நாளையுடன் நிறைவடைகிறது. சோதனை ஓட்டத்தினால், அருகில் உள்ள கிராம மக்களுக்கு, கண் எரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக அணுஉலை எதிர்ப்பாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.


puthiyathalaimurai.tv thanks

No comments:

Post a Comment