அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Friday 26 April 2013

சாலையில் கிடந்த விடைத்தாள் கட்டு - ரிக்‌ஷா தொழிலாளி கைபற்றினார்!


வெள்ளி, 26 ஏப்ரல் 2013 


சாலையில் கிடந்த விடைத்தாள் கட்டு - ரிக்‌ஷா தொழிலாளி கைபற்றினார்!
மன்னார்குடி: சாலையில் கிடந்த பிளஸ் 1 விடைத்தாள் பண்டல்களை தட்டு வண்டி ரிக்‌ஷா தொழிலாளி கைபற்றி கல்வித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஐவர் சமாதி பகுதியில் நேற்று ஓரு ஆட்டோ சென்றது. அதில் இருந்து 2 பண்டல்கள் கீழே விழுந்தது. அப்போது அந்த வழியாக சென்ற தட்டு ரிக்ஷா தொழிலாளி பூமிநாதன் அந்த பண்டல்களை எடுத்து பார்த்தார். அதில் பிளஸ் -1 முழு ஆண்டு தேர்வு விடைதாள் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இவற்றில் முத்துப்பேட்டை ரஹ்மத் மெட்ரிக் பள்ளி மற்றும் மன்னார்குடி தூய வளனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி என அந்த பண்டல்களில் அச்சிடப்பட்டு இருந்தது.
இதுகுறித்து கல்வித்துறை யினருக்கு பூமிநாதன் தகவல் கொடுத்தார். கல்வித்துறை அதிகாரிகள் வந்து பூமிநாதனிடம் இருந்த பேப்பர் பண்டல்களை பெற்று சென்றனர்.
பிளஸ்- 2 தேர்வு நடந்து கொண்டிருக்கும்போது, கேள்வித்தாள்கள் பாதி எரிக்கப்பட்டு கிடந்தது. மேலும் ரெயிலில் கொண்டு சென்ற கேள்வித்தாள்களும் கீழே விழுந்து கிடந்தது. சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்குகள் நடந்து கொண்டிருக்கும்போது,  பிளஸ்- 1 விடைத்தாள் பண்டல்கள் சாலையில் விழுந்து கிடந்ததால் கல்வித்துறை அதிகாரிகள் மத்தியிலும், தேர்வு எழுதிய மாணவர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

.inneram thanks

No comments:

Post a Comment