அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Tuesday, 30 April 2013

தங்கம் ஏற்றுமதி இறக்குமதிக்குத் தடை : அரசு அதிரடி நடவடிக்கை!




சில புகார்களின் அடிப்படையில் பொருளாதார மண்டலங்கள் மூலம் தங்கத்தை ஏற்றுமதி செய்யவும், இறக்குமதி செய்யவும் மத்திய அரசு தற்காலிகத் தடை விதித்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் தங்கம் இறக்குமதி செய்யப்படுவதால் அமெரிக்க டாலருக்கு தேவை அதிகரித்து ரூபாய் மதிப்பு சரிகிறது. இதனால், தங்கம் இறக்குமதியைக் கட்டுப்படுத்த அதிகபட்சமாக 6 சதவிகித சுங்க வரி விதிக்கப்படுகிறது. ஆனால், சிறப்பு பொருளாதார மண்டலங்களில் உள்ள  நிறுவனங்கள் தங்கள் தேவைக்கு வரி இல்லாமல் பொருட்களை இறக்குமதி செய்யலாம் என்கிற விதி உள்ளது.

தற்போது தங்கம் விலை குறைந்துள்ளதால் இந்த சந்தர்ப்பத்தை தவறாக பயன்படுத்திக் கொண்டு, சிறப்பு பொருளாதார மண்டலங்களில் உள்ள சில நிறுவனங்கள் தங்கத்தை வரி இல்லாமல் இறக்குமதி செய்து, அதை உள்ளூரில் விற்று வருவதாக வருவாய்த் துறைக்கு புகார்கள் வந்தன.

இத்தகைய நிறுவனங்கள் தங்கம் இரக்குமதி மூலம் 7.5 சதவிகித வரியை செலுத்தாமல் வருவாய் ஈட்டி வந்தன என்றும் தெரிகிறது. இதைக் கட்டுப்படுத்த சிறப்பு பொருளாதார மண்டலங்கள் மூலம் தங்கம் இறக்குமதி செய்ய மத்திய அரசு தற்காலிகத் தடை விதித்துள்ளது. அதே போல ஏற்றுமதி செய்யப்படும் தங்க பொருட்களுக்கு குறைந்த பட்சம் 5 சதவிகித வரி விதிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.


4tamilmedia thanks

No comments:

Post a Comment