அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Saturday 27 April 2013

வீணாக பேசிக்கொண்டிருக்காமல் சீன படையை விரட்டியடிக்க வேண்டும் : முலாயம் சிங் ஆவேசம்




துரோகி சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பதில் நமது எல்லைக்குள் நுழைந்துள்ள அந்நாட்டு வீரர்களை  விரட்டியடிக்க வேண்டும் என்று, சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் ஆவேசத்துடன் கூறியுள்ளளார்.

இதுத் தொடர்பாக நேற்று லக்னோவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "சீன ராணுவம் ஊடுருவியுள்ள  விவகாரத்தில் மத்திய அரசு தனது பலவீனத்தைக் காட்டுகிறது. இந்திய எல்லைக்குள் சீனப்படை 10 கிலோ மீட்டர் முதல் 20 கிலோ மீட்டர் வரை ஊடுருவியுள்ளது. துரோகி சீனாவுடன் வீணாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பதில்,

இந்திய எல்லைக்குள் நுழைந்த அந்நாட்டு வீரர்களைத் தாக்குதல் நடத்தி விரட்டியடிக்க வேண்டும். ஊடுருவல் குறித்து முன்கூட்டியேத் தகவல் தெரிவிக்காமல் உளவு அமைப்புக்கள் என்ன செய்கின்றன என்பதே தெரியவில்லை. சீனாவிடம் கைகட்டி பேசுசுவார்த்தை நடத்த சில அமைச்சர்கள் சீனா செல்ல இருப்பதாக அறிந்தேன். அப்படி அமைதிப்பேச்சு வார்த்தைக்கெல்லாம் சீனப்படைகள் வெளியேறாது. சீனாவைப் பற்றி நான் பல ஆண்டுகளாக எச்சரிக்கை விடுத்துள்ளேன், மக்களவையிலும் இது குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு  பேசி இருக்கிறேன். ஆனால், தற்போது சீனா இந்திய எல்லையில் ஊடுருவி விட்டது.

சீன வீரர்களை விரட்ட அரசுக்கு தைரியம் இல்லை. சீன ஊடுருவல் குறித்து ஆலோசிக்க மத்திய அரசு எனக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதுத் தொடர்பாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ கே அந்தோணியிடமும் பேசியுள்ளேன். பிரச்சனையைத் தீர்த்துவிடலாம் என்று கூறியுள்ளார். அப்படித் தீர்க்காவிட்டால் அவர் பதவி விலக வேண்டும் என்று கூறியுள்ளேன்." என்று முலாயம் சிங் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

4tamilmedia. thanks

No comments:

Post a Comment