முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இந்த அரசு ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு, உயர் கல்வியிலே அரசாங்கத்தினுடைய பங்களிப்பு கணிசமான அளவுக்க உயர்ந்து வருகிறது. அதற்கான அறிவிப்புகளையெல்லாம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களும், உயர் கல்வித்துறை மானியக் கோரிக்கையிலே மாண்புமிகு அமைச்சர் அவர்களும் செய்தார்கள்.
அமைச்சர் அவர்கள் சொன்னது போல் தமிழ்நாட்டில் 7 அரசு கல்வியியல் கல்லூரிதான இருக்கின்றன. அதில் வசூலிக்கப்படக்கூடிய கல்விக் கட்டணத்திற்கும், சுயநிதிப் கல்வியில் கல்லூரியிலே வசூலிக்கப்படக்கூடிய கல்விக் கட்டணத்திற்குமிடையயே மிகப் பெரிய இடைவெளி இருக்கக்கூடிய சூழ்நிலையில், அரசாங்கத்தினுடைய கவனம் இந்த விஷயத்திலே சற்று கூடுதலாகி மாவட்டந்தோறும் அரசு கல்வியியல் கல்லூரிகள் தொடங்குவதற்கு இந்த அரசு முன்வருமா? அப்படி வரும்பொழுது அரசு கல்வியியல் கல்லூரி இல்லாத இராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு கல்லூரி கட்டுவதற்கு இந்த அரசு முன்வருமா என்று தங்கள் வாயிலாக அறிய விரும்புகிறேன...
No comments:
Post a Comment