பசிபிக் கடலில் அமைந்துள்ள
பப்வா நியூகினியா நாட்டில் பௌகன்வில்லே தீவுக்கு அருகே ஏற்பட்ட இந்த கடுமையான
நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 5.6 ஆக பதிவானது.
அதிக எரிமலை குமுறல்களும், பூகம்பமும் நடக்கக்கூடிய இப்பகுதியை 'ரிங் ஆப் பையர்'
என்று அழைக்கப்படுவர். பௌகன்வில்லே தீவுப்பகுதியில் இருந்து 125 கிலோ மீற்றர்
தென்மேற்கே 10 கிலோ மீற்றர் ஆழத்தில் இந்த பூகம்பத்தின் மையம் இருந்ததாக
கூறப்படுகின்றது.
இதில் பாதிப்பு குறித்த எந்த செய்திகளும் வரவில்லை. மேலும் சுனாமி குறித்த
எச்சரிக்கையும் விடப்படவில்லை என்று அமெரிக்கா பூகம்ப ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
'ரிங் ஆப் பையர்' பகுதியில் உள்ள டெக்டோனிக் பாறைதட்டுகளில் ஏற்படும் உராய்வின்
காரணமாக வறுமை நாடான இந்த பப்புவா நியூகினியா இது போன்று பூகம்பங்களை அடிக்கடி
சந்திக்கின்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் இன்று ரிக்டர் அளவில் 7.8 அளவிலான கடுமையான பூகம்பம் ஈரானை தாக்கியது.
இதில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது. இந்தியாவின்
வடமாநிலங்களில் பல பகுதிகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment