அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Tuesday, 16 April 2013

மனிதாபிமானம் மிச்சம் இருக்கிறதா? உதவும் நெஞ்சங்கள் எங்கே?



ஏப்ரல் 16, 2013  
 
ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் சாலை விபத்தில் படுகாயமடைந்த தாயும், சேயும் உரிய நேரத்தில் யாரும் உதவி செய்யாததால் உயிரிழந்த சம்பவம், மனிதாபிமானம் உலகத்தில் இருக்கிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
எனினும், இந்த சம்பவத்தில், சாலைக் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த அலுவலர்கள் உரிய முறையில் செயல்பட்டு நடவடிக்கை எடுத்திருந்தால், விலைமதிப்பற்ற உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம் என மனித உரிமை ஆர்வலர்களும், மகளிர் அமைப்பினரும் ரிவித்துள்ளனர்.

ராஜஸ்தானை சேர்ந்த சிறுவனின் பெயர் தனிஷ். இவனது தாய் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம்தான் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்தியாவில் சாலை விபத்துகள் நடப்பது வாடிக்கையான விஷயம் என்றாலும், தனிஷின் தாய் குட்டிக்கு நேர்ந்த கொடுமை, மக்கள் மனதில் மனிதாபிமானம் மிச்சம் இருக்கிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
ஜெய்ப்பூர் நகரில் இரு சக்கர வாகனத்தில் குடும்பத்தினருடன் சென்ற ரெய்கர், சுரங்க சாலையில் சென்று கொண்டிருந்த போது சரக்கு வாகனம் இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் அவரது மனைவி குட்டி மற்றும் 6 மாத குழந்தை ஆருஷி ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர்.
இதனையடுத்து, தனது செல்போன் மூலம் உறவினர்களையும், போலீசாரையும் தொடர்பு கொள்ள முயன்ற ரெய்கர், சிக்னல் கிடைக்கததால், அங்கு சென்ற வாகனங்களை நிறுத்தி உதவி கேட்க முனைந்தார்.
போக்குவரத்து நிறைந்த முக்கிய சாலையில், மருத்துவ உதவிக்காக ரெய்கரும், சிறுவன் தனிஷும் கூக்குரலிட்ட போது, சாலையில் சென்ற யாரும் உதவுவதற்கு முன்வரவில்லை என்பதுதான் மனதை உலுக்கும் சோகம்.
விபத்தில் சிக்கிய ரெய்கரின் மனைவி உடல், சரக்கு வாகனத்தின் அடியில் சிக்கிக் கொண்டதால், சில மீட்டர் தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. ஜெய்ப்பூரின் முக்கிய சாலையில் நிகழ்ந்த இந்தக் கோர விபத்து, அங்கு பொறுத்தப்பட்டிருந்த ரகசிய கண்காணிப்பு கேமராவிலும் பதிவாகியிருக்கிறது.
இந்த விபத்து நிகழ்ந்ததை கண்காணிப்புக் கேமரா மூலம் பார்த்த அதிகாரிகள், உடனடியாக முதலுதவி அளிக்க நடவடிக்கை எடுத்திருந்தால், ரெய்கரின் மனைவியும், குழந்தையும் காப்பாற்றியிருக்கலாம் என தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
விபத்திற்கு காரணமான சரக்கு வாகனத்தின் ஓட்டுநர் தப்பிச் சென்று விட்டார். எனினும், அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சாலையில் உயிருக்குக் போராடிக் கொண்டிருந்த தாயையும், சேயையும் காப்பாற்ற யாரும் முன்வரவில்லை என்பது சமுதாய அக்கறை மறைந்து, மக்களின் அன்றாட வாழ்க்கை இயந்திரத்தனமாக மாறி விட்டதையே காட்டுகிறது என மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

puthiyathalaimurai.tv thanks

No comments:

Post a Comment