


திருவண்ணாமலை

ஆம்பூர்
கல்பாக்கம் அணுமின்நிலையம் அருகில் உள்ள கிராம
மக்களின் ஜீவாதார கோரிக்கைகளுக்காக போராட்டத்தில் ஈடுபட்ட தமுமுக பொதுச்செயலாளர்
ப.அப்துல் சமது உள்ளிட்டவர்களை கைது செய்ததை கண்டித்தும், அவர்களை உடனே விடுதலை
செய்ய வலியுறுத்தியும், இன்று (29/03/13) ஆம்பூரில் தமுமுக சார்பில் கண்டன
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் பி.தபரேஸ் தலைமை
தாங்கினார், மாவட்ட பொருளாளர் மிஸ்பாஹ். மாவட்ட து.செயலாளர்கள் ஷவ்கத்,அஸ்கர், நகர
நிர்வாகிகள் ஜியா, சாதிக். அப்ரோஸ்.அஷ்ரப் அலி.பாகி.ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மமக நகர செயலாளர் ஹமீத். மாவட்ட து.செயலாளர் சனாவுல்லாஹ். மமக மாவட்ட செயலாளர்
நசீர் அஹ்மத். தமுமுக மாவட்ட செயலாளர் அப்துல் ஷுகூர் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.
மாவட்ட தலைவர் அ.அஸ்லம் பாஷா MLA அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார். நகர செயலாளர்
S.தபரேஸ் நன்றி கூறினார்.
திருச்சி
கல்பாக்கம் அனுமின் நிலையம் சம்மந்தமாக பல்வேறு
கோரிக்கைகளை வலியுறுத்த அறவழியில் போராடிய தமுமுக மாநில பொதுச்செயலாளர் அப்துல்
சமது ,மதிமுக மாநில துணைப்பொதுச்செயலாளர் உட்பட 500க்கும் மேற்பட்டவர்களை கைது
செய்து சிறையில் அடைத்த காவல்துறையை கண்டித்தும், கைது செய்தவர்களை உடனே விடுதலை
செய்ய தமிழக அரசை வலியுறுமத்தியும் இன்று 29.03.2013 வெள்ளிக்கிழமை மதியம் 4.30
மணியளவில் திருச்சி பாலக்கரை ரவுண்டான அருகில் மாபெரும் ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர்
அப்துல் ஹக்கிம் தலைமையிலும்,மாவட்ட செயலாளர் இப்ராஹிம்ஷா,மாவட்ட செயலாளர்(மமக)
பைஸ் அஹமது ,மாவட்ட பொருளாளர் இம்தியாஸ் அஹமது,மாவட்ட துணைத்தலைவர் முஹம்மது
ரபீக்,மாவட்ட துணைச்செயலாளர்கள் தமீம் அன்சாரி,ஹபீபுல்லாஹ்,முஹம்மது தல்ஹா,சாதிக்
பாஷா மற்றும் மாவட்ட அணிநிர்வாகிகளும்,மதிமுக மாவட்ட செயலாளர் மலர்மன்னன் மற்றும்
புறநகர் மாவட்ட செயலாளர் சேரன்,வழக்கறிஞர் கென்னடி
ஆகியோர்களும்,வார்டு,ஒன்றிய,கிளைகழக நிர்வரிகளும் பொதுமக்களும் பெருந்திரளாக கலந்து
கொண்டார்கள்
புளியங்குடி
No comments:
Post a Comment