
April 26,
2013 04:07 pm
லத்தீன்
அமெரிக்க நாடுகளில்,
புற்றுநோயால் தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் எண்ணிக்கையை விட குறைவாக
இருந்தாலும்,
இறப்பு விகிதம்
அதிகரித்துக்காணப்படுவதாக ஆய்வாளர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.
பிரேசில் நாட்டின் சாவ் பாலோ நகரில் நடைபெற்ற, கான்சர்
நோய் பற்றிய சிறப்புக் கருத்தரங்கு ஒன்றில், ஆய்வாளர்களால் இது குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
லத்தீன்
அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதிகளைச் சேர்ந்த, அர்ஜென்டினா, பஹாமாஸ், பொலிவியா, பிரேசில், சிலி, கொலம்பியா, கோஸ்டாரிகா, டொமினிகன் குடியரசு ,ஈக்வடார், குவாதமாலா, பிரெஞ்ச் கயானா, கயானா, ஹோண்டுராஸ்,ஹைதி, மெக்சிகோ, நிகாராகுவா, பனாமா, பெரு, போர்டோரிகோ, பராகுவே
மற்றும் எல் சால்வடார் ஆகிய நாடுகளில் உள்ள புற்று
நோயாளிகளையும்,
அவர்களுக்குத் தரப்படும் சிகிச்சை முறைகளையும் ஆய்வு செய்து, அவற்றின் முடிவுகளை ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர்.
நாடுகளின் பொருளாதார நிலை உயர்வடையும் போது, மக்களின் வாழ்க்கைத்தரமும் உயர்வதால், அவர்கள்
மேற்கத்திய நாடுகளின் நாகரீக வாழ்க்கைப்பாணியைப் பின்பற்றுகின்றனர். உடல் உழைப்பில்லாத
வாழ்க்கைமுறைகளும்,
ஆரோக்கியக் கேடான விரைவு
உணவுகளும், புகைப்
பிடித்தல், மது
போன்ற பழக்கங்களும்,
அவர்களை இந்நோயில் ஆழ்த்துகின்றன.
நோயின்
அறிகுறிகள் தாமதமாகக் கண்டுபிடிக்கப்படுவதும், தகுந்த
சிகிச்சைகளை மேற்கொள்ளாமல் இருப்பதும், இவர்களின் இறப்பு விகிதம் அதிகரிப்பதற்குக் காரணமாகின்றன. இந்த
நிலை தொடர்ந்து நீடித்தால், 2030ஆம்
ஆண்டில், இந்த
நாடுகளில் இருக்ககூடிய புற்று நோயாளிகளின் எண்ணிக்கை 1.7 மில்லியனாக இருக்கக்கூடும். அதில், ஒரு
மில்லியன் நோயாளிகள் இறக்கும் நிலை உருவாகக்கூடும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
thamilan thanks
No comments:
Post a Comment