அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Thursday, 9 May 2013

ரூ.10 கோடி லஞ்சம்: ரெயில்வே அதிகாரிகள் 4 பேர் சிக்குகிறார்கள்


ரூ.10 கோடி லஞ்சம்: ரெயில்வே அதிகாரிகள் 4 பேர் சிக்குகிறார்கள்
புதுடெல்லி, மே. 10-

ரெயில்வே வாரியத்தில் பணியாளர் பிரிவில் அதிகாரியாக இருப்பவர் மகேஷ்குமார். இவர் ரெயில்வே வாரியத்தில் பல ஆயிரம் கோடி பணம் புழங்கும் மின்துறைக்கு இடமாறுதல் பெற விரும்பினார். ரெயில்வே மந்திரி பவன்குமார் பன்சாலின் உறவினர் விஜய் சிங்லாவை அணுகி இட மாறுதலுக்காக மகேஷ் குமார் லஞ்ச பேரம் பேசினார்.

அந்த பதவிக்காக ரூ.10 கோடி கொடுக்க மகேஷ் குமார் ஒப்புக்கொண்டார். முதல் கட்டமாக ரூ.90 லட்சம் கொடுக்கப்பட்டபோது விஜய் சிங்லாவை சி.பி.ஐ. அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்தனர். அதன் பிறகு மகேஷ் குமார் உள்பட 9 பேர் கைதானார்கள். அவர்களை சி.பி.ஐ. அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள்.

இதன் மூலம் ரெயில்வே அமைச்சகத்தில் இட மாறுதலுக்கு பல கோடி ரூபாய் லஞ்சமாக கைமாறி இருப்பதும் அதில் ரெயில்வே அதிகாரிகளும் சம்பந்தப்பட்டு இருப்பது தெரியவந்தது. பன்சாலின் உறவினர்கள் விஜய் சிங்லா லஞ்சம் வாங்குவது தொடர்பாக ரெயில்வே அதிகாரிகள் யார், யாருடன் பேசியுள்ளார் என்று போன் உரையாடல்கள் பதிவை ஆய்வுச் செய்தனர்.

அப்போது ரெயில்வே அமைச்சக மூத்த அதிகாரி விதுல் குமார், மந்திரி பன்சாலின் தனி உதவியாளர் ராகுல் பண்டாரி உள்பட 4 அதிகாரிகள் லஞ்சம் பெறுவது தொடர்பாக பேசி இருப்பது உறுதியாகி உள்ளது. இந்த 4 அதிகாரிகளில் ராகுல் பண்டாரியிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினார்கள். மற்ற 3 அதிகாரிகளிடமும் ஓரிரு நாட்களில் விசாரணை நடத்தி முடிக்க சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிரமாக உள்ளனர்.

விசாரணை முடிந்த பிறகு ரெயில்வே அமைச்சக அதிகாரிகள் 4 பேரையும் சி.பி.ஐ. கைது செய்யும் என்று தெரிகிறது. இதனால் ரெயில்வே அமைச்சக அலுவலகமே பரபரப்பில் ஆழ்ந்துள்ளது. இதன் அடுத்தக்கட்டமாக பன்சாலிடம் சி.பி.ஐ. விசாரிக்கும் என்று தெரிகிறது. அதற்கு முன்னதாக பன்சால் பதவி பறிக்கப்பட்டு விடும் என்று கூறப்படுகிறது.

maalaimalar thanks

No comments:

Post a Comment