அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Thursday, 9 May 2013

வங்கதேச கட்டிட விபத்து : பலி எண்ணிக்கை 1006 ஆக உயர்வு


வங்கதேச கட்டிட விபத்து : பலி எண்ணிக்கை 1006 ஆக உயர்வு
டாக்கா, மே 10- 

வங்கதேச தலைநகர் டாக்கா அருகில் உள்ள சாவர் பகுதியில் ஆயத்த ஆடை தொழிற்சாலைகள் இயங்கி வந்த, 8 அடுக்கு கட்டிடம் ஒன்று கடந்த மாதம் 24-ம் தேதி இடிந்து விழுந்தது. அப்போது அங்கு பணியில் இருந்தபெண்கள் உள்பட  ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கினர் இடிபாடுகளை அகற்றி மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது வரை 2437 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் 1000 பேர் படுகாயமடைந்துள்ளனர். 

இறந்தவர்களின் உடல்களும் ஏராளமாக மீட்கப்பட்டு வருகின்றன. நேற்று வரை 900 உடல்கள் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டிருந்தன. 17 வது நாளன இன்று மேலும் 106 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1006 ஆக உயர்ந்துள்ளது. 

மீட்கப்பட்டுள்ள பல உடல்கள் அழுகிய நிலையில் இருப்பதால் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இறந்தவர்கள் அணிந்திருக்கும் உடைகள், நகைகள், செல்போன் போன்றவற்றை வைத்தே அடையாளம் கண்டு வருகிறார்கள். இதுவரை 150 உடல்கள் அடையாளம் காணப்படாமல் புதைக்கப்பட்டுள்ளன. மீட்புபணி தொடர்ந்து நடந்து வருகிறது.

maalaimalar thanks

No comments:

Post a Comment