பஸ் மீது ராக்கெட் குண்டு தாக்குதல் : 10 பேர் பலி..
[ ஞாயிற்றுக்கிழமை, 12 மே 2013,
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் பகுதியில் சுயேட்சை வேட்பாளராக சையத் காதிம் ஹுசேன் ஷா போட்டியிட்டார்.நேற்றிரவு,
இவரது ஆதரவாளர்கள் நசீராபாத் மாவட்டத்தின் சத்தார் அருகே உள்ள ஓட்டு
எண்ணும் இடத்திற்கு ஒரு பஸ்சில் சென்றுக் கொண்டிருந்தனர்.
பஸ்சை வழிமறித்த தீவிரவாதிகள் ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலில் பஸ் எரிந்து நாசமடைந்தது.
சம்பவ இடத்திலேயே 10 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். 15
பாடுகாயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக டேரா ஜமாலி ஆஸ்பத்திரியில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
No comments:
Post a Comment