அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Monday 27 May 2013

கீழக்கரை முகமது சதக் பொறியியல் கல்லூரியில் 25-வது பட்டமளிப்பு விழா

கீழக்கரை முகமது சதக் பொறியியல் கல்லூரியில் 25-வது பட்டமளிப்பு விழா
ராமநாதபுரம், மே 

கீழக்கரை முகமது சதக் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழாவில் மாணவ- மாணவிகள் பட்டங்களை பெற்றுக் கொண்டனர்.

கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரியின் 25-வது பட்டமளிப்பு விழா கல்லூரி தலைவர் ஹமீது அப்துல் காதர் தலைமையிலும், கல்லூரி செயலாளர் யூசுப், கல்லூரி இயக்குநர் ஹபீப் முகம்மது சதக்கத்துல்லா முன்னிலையிலும் நடை பெற்றது. விழாவில் பொறியியல், மற்றும் நிர்வாக மேலாண்மை படிப்பில் படித்து பட்டம் பெற்ற 553 மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது.

கல்லூரி முதல்வர் முகம்மது ஜஹாபர் கல்லூரியின் ஆண்டறிக்கையை வாசித்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக பாரதிய நபீக்கிய வித்யூத் நிகாம் லிமிடெட்டின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பிரபாத்குமார் பங்கேற்று பட்டங்களை வழங்கி பேசினார்.

அவர் பேசியதாவது:-

பொறியியல் படிப்பை முடித்த பொறியாளர்களுக்கு தாங்கள் முன்னேறுவதற்கும் தங்களுடைய தனித்திறமை யையும் வெளிப்படுத்தவும் இது சரியான நேரம். தாங்கள் படித்த படிப்பை சமுதாயத்திற்கு உதவுவதற்கு மாற்றக்கூடிய வகையில் செய்வதற்குரிய வாய்ப்பும் அதிர்ஷ்டத்தையும் பெற்றிருக் கின்றீர்கள். இன்று பொறியியல் மாண வர்கள் சாதனை புரிவதற்கு ஏராளமான துறைகள் இருக்கின்றது.

அவற்றில் நீங்கள் சரியான துறையை தேர்ந்தெடுத்து, அதனை ஈடுபாட்டுடன் செய்யும் பொழுது உங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கும். எண்ணங்களை மேம்படுத்தி சரியான முறையில் சிந்தனை செய்தால் நீங்கள் தேர்ந்தெடுத்த துறையில் சாதனைகளை புரியலாம். இந்திய பொறியியல் வல்லுநர்கள் இன்று உலக அரங்கில் எல்லா நாடுகளிலும் வரவேற்கப்பட்டு மதிப்புடன் நடத்தப்படுகின்றார்கள்.

உங்களுடைய திறமைகளை உள்கட்டமைப்பு, நீர் ஆதாரம் மற்றும் மின்சாரம் நிர் வாகம் பகிர்ந்தளிப்பில் பொறியியல் மாணவர்கள் தங்களுடைய திறமைகளை காட்டுவதற்கு சரியான நேரம். ஒவ்வொரு நாளும் அதிகமாகிக்கொண்டே வரும் மின்சாரத் தேவையினை பூர்த்தி செய்வது இன்றைய பொறியியல் மாணவர்களின் கடமையாகும். உங்கள் முன்னேற்றத்திற்கு உதவிய பேராசிரியர்கள் மற்றும் கல்லூரியையும் மறக்கக்கூடாது. உங்களுடைய பெற்றோர்கள் கஷ்டத்தோடு உங்களை ஆளாக்கியிருக்கின்றார்கள்.

நீங்கள் உங்களுடைய பெற்றோர்களை எப்போதும் மறக்கக்கூடாது. அத்துடன் நில்லாமல் உங்களை ஆளாக்கிய சமுதாயத்திற்கும் ஏழை மக்களுக்கும் உதவி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.


maalaimalar thanks

No comments:

Post a Comment